முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டே பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்: அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடப்பாண்டு முதலாம் ஆண்டில் சேரும் பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை துவங்கியது. பொறியியல் தரவரிசையில் பத்து முதலிடங்களை பிடித்த ஸ்ரீராம், ஹரிவிஷ்ணு,சாய்ராம், யுவனேஷ்,பிரீத்தி, சதிஷ்வர், முகமது அர்ஷாந்த், நிதிஷ், சித்தார்த் கல்துரை, காவியா ஆகியோருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ராஜேந்திரரத்னு ஆகியோர் வழங்கினர்.

இதன் பின்னர் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், , இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பொதுப்பிரிவினருக்கு வரும் 11 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 9 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு மாணவர்கள் 2 மணி நேரம் முன்னதாக வரவேண்டும். இந்த ஆண்டு மாணவிகள் தங்களின் பெற்றோருடன் வந்தாலும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, 2 மணி நேரம் முன்னதாக கலந்தாய்வு அரங்கிற்கு வர வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு எந்த கல்லூரியில் காலியிடங்கள் உள்ளது என்பதை அறிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையான குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும் போது கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் விபரத்தை தெரிந்துக் கொள்ள பெரியத் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் வந்து காத்திருந்து பார்வையிடுவதற்கு பெரிய அளவில் ஹால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான கல்விக் கடனை பெறுவதற்கு வசதியாக வங்கியின் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 7 ஆயிரம் விண்ணப்பம் கூடுதலாக வந்துள்ளன. தென்மாநிலங்களில் உள்ள 7 மாநிலங்களில் ஆந்திராவில்,கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களில் கல்லூரிகள் குறைவாக உள்ளது. தென்மாநிலங்களில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 55 சதவீதம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படுகிறது. ஆந்திரா, மகராஷ்டிராவை பார்த்தாலும், இந்திய அளவில் பார்த்தாலும் 50 சதவீதம் இடங்கள் தான் நிரம்புகின்றன.

இந்தியாவில் மொத்தம் சுமார் 15 லட்சம் இடங்கள் தான் உள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நன்றாகத்தான் உள்ளது. சுயநிதி பல்கலைக் கழகத்தினையும் சேர்த்தால் சுமார் 13 லட்சம் பேர் படிக்கின்றனர். ஆனால் இந்திய அளவில் நமக்கு தேவையான பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு தோறும் சுமார் 8 லட்சம் பேர்தான்.

பொறியியல் கலந்தாய்வில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட முடியாது. அடுத்த ஆண்டு கலந்தாய்வில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் கவுன்சில் முறை அமுல்படுத்தப்படும். இதனால் முன்பு இருப்பவர் இடத்தினை தேர்வு செய்து விட்டு, விட்டு விட்டு சென்றால் பின்னால் இருப்பவருக்கு அந்த இடம் தரவரிசைப்படி ஒதுக்கப்படும். இதனால் பொறியியல் கலந்தாய்வில் அடுத்தாண்டு முதல் பிற உயர்கல்விக் கலந்தாய்விற்காக காத்திருக்க வேண்டியதில்லை.

பொறியியல் பாடத்திட்டம் கடந்த 2013ம் ஆண்டு மாற்றப்பட்டது. இந்த ஆண்டிற்கான கலைத்திட்டம் தயார் செய்யப்பட்டு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி மன்றக்குழுவின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தேர்வுமுறைகளிலும் மாற்றம் செய்ய உள்ளது.. தற்பொழுது முதலாம் ஆண்டில் சேர உள்ள மாணவர்களுக்கு புதியப்பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். இந்த பாடத்திட்டம் தொழிற்சாலைகள் சார்ந்ததாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து