மலரே! குறிஞ்சி மலரே! கொடைக்கானலில் குறிஞ்சி மலர்!

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      திண்டுக்கல்
kodai 1

   கொடைக்கானல்-- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப் பூ கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமா பூக்கத துவங்கி உள்ளது.
 தமிழ் சங்க காலத்தில் நிலங்களை ஐந்து வகைகளாக பகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  ஐந்து வகை நிலங்களிலும் முதன்மையான நிலம் குறிஞ்சி நிலம். மலைகளும் மலை சார்ந்த நிலங்களுமே குறிஞ்சி நிலமாகும். குறிஞ்சி நிலத்தின் பிரதான பூ வகை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப்பூ ஆகும். சங்க காலத்தில் குறிஞ்சி நிலப் பகுதியினை சேர்ந்த வீரர்கள் போர் செய்து அதில் வெற்றி பெறும்  போது அவர்களுக்கு குறிஞ்சி மலர் கிரீடம் அணிவிப்பதாகவும் கூறப்படுகின்றது. சங்ககாலம் முதலே குறிஞ்சி பூ பற்றிய தகவல் இருப்பதால் மிக தொன்மையான மலர் வகையாக குறிஞ்சிப்பூ திகழ்கிறது. கொடைக்கானலில் மலைகளின் கடவுளான முருகப் பெருமான் குறிஞ்சி ஆண்டவன் என்று போற்றப்படுகிறான். குறிஞ்சி மலர்கள் நிறைந்த மலைப்பகுதியில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவன் வீற்றிருந்து அணைவருக்கும் அருள்பாலிக்கிறான்.
குறிஞ்சிப்பூ பற்றிய தகவல்கள்:  குறிஞ்சிப்பூ சுமார் ஆயிரத்து 600 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பாங்கான இடங்களில் வளரக் கூடியது. இம் மலர் கேரள மாநிலம் இடுக்கி, மூனாறு, ஆகிய மலைப்பகுதிகளிளும் தமிழ்நாட்டில் ஆணைமலை, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் காணப்படுகின்றது. கொடைக்கானல் வனப்பகுதியில் சுமார் 2ஆயிரத்து 578 தாவர வகைகள் உள்ளது. இதில் 248 தாவர வகை உலகில் வேறு எங்கும் காணமுடியாத அரிய வகைகளை சேர்ந்தது.  இதில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக் கூடிய தாவர வகையை சேர்ந்ததுதான்  குறிஞ்சி பூ ஆகும்.
 குறிஞ்சிப்பூவிலேயே 8 வகையான பூக்கள் உள்ளது. குறிஞ்சிப்பூவின் தாவரவியல் பெயர் ஸ்ட்ரொபிலாந்தஸ் குந்தியானா, ஸ்ட்ரொபிலாந்தஸ் குந்தியானம், ஸ்ட்ரொபிலாந்தஸ் ஏசட்டைவம், ஸ்ட்ரொபிலாந்தஸ் போலியோசா உள்ளிட்ட எட்டு வகைகள் கொடைக்கானலில் வளர்கின்றது. புதர்செடி வகையை சேர்ந்தது. இந்த 8 வகையான குறிஞ்சிப் பூக்கள் இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக்கூடியது. நீலக்குறிஞ்சிதான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ ஆகும். கொடைக்கானலில் கடந்த 2005-2006 ல் நீலக்குறிஞசி பூ மலை முழுதும் பூத்து குளுங்கியது.குறிஞ்சித் தேன்: குறிஞ்சிப்பூ பூக்கக்கூடிய காலத்தில் இந்த பூ வில் இருந்து எடுக்கப்படும் தேன் மிக அதிசயமான ஒன்றாக மலை வாழ் மக்கள் கருதுகின்றனர். குறிஞ்சித்தேன் நிறத்தில் கருப்பாக காணப்படும்.  குறிஞ்சித்தேன் மிக்க மருத்துவ குணமுடையது ஆகும்.
குறிஞ்சிப் பூ சரணாலயம்;:  குறிஞ்சிப்பூ புதர் செடியாக வளர்வதால் இந்த செடி மிக எளிதில் அழிந்து விடும்.  இந்த செடியின் விறகு பச்சையாக இருந்தாலும் எளிதில் எரிந்துவிடும் தன்மையுடையது.
 கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் குறிஞ்சி மலர்களை பாதுகாக்க குறிஞ்சி மலர் சரணாலயம் அமைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும்  நிபுநர்கள் குழுக்கள் பார்வையிட்டனர். தொகை கூட ஒதுக்கப்பட்டது. ஆனால் இத் திட்டம் வீனாகப் போய்விட்டது என்று சொன்னால் மிகையில்லை. தற்போது பூக்கும் இந்த குறிஞ்சிப்பூக்களை பிற்காலத்தில் படத்தில் மட்டும் பார்க்காமல் தொன்மை தொட்டு நம் தமிழ் நாட்டின் பாரம்பரிய மலரான இம் மலரை அழியாமல் பாதுகாக்க வனத்துறையினரும், மற்றும் அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கொடைக்கானல் வரும் பல சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பாக வட மாநில சுற்றுலாப்பயணிகளுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் இந்த மலர் பற்றிய எந்த தகவலும் தெரியாது. எனவே குறிஞ்சி மலர் பற்றிய தகவல்களை அவர்களுக்கு சுற்றுலாத்துறை தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த மலர் செடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். கொடைக்கானலில் விரைவில் குறிஞ்சிப்பூ சரணாலயம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சிப்பூ கொடைக்கானல் - பழனி  சாலை பகுதிகளிலும் அதை ஒட்டியும் காட்டிற்குள்ளும்  தற்போது பூக்கத துவங்கியுள்ளது.  தற்போது மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இரண்டாம் சீசன் எனும் ஆப் சீசன் காலம் துவங்க உள்ளது. இந்த இரண்டாம் சீசனை வரவேற்கும் விதமாக தற்போது  இந்த அதிசய குறிஞ்;சி மலர் பூத்துள்ளது.  இந்த இரண்டாம்  சீசனை களிக்க கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இந்த அதிசய குறிஞ்சி மலர்.
அப்துல் கலாமும் குறிஞ்சிப் பூவும். நம் நாட்டின் பெருமை மிகு குடியரசுத் தலைவர்களில் ஒருவரான அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது கொடைக்கானல் மலை முழுதும் குறிஞ்சி மலர்கள் பூத்து குளுங்கி இருந்தது. அவர் பங்கேற்ற அரங்கில் அவரது இருக்கைக்கு அருகிலும் குறிஞ்சி மலர்கள் கொத்து வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு குறிஞ்சி மலர் கொத்து கொடுத்தும் வரவேற்கப்பட்டது. இந்த மலர்களை பார்த்த அப்துல் கலாம் இந்த மலர் பற்றி கேட்டறிந்த இதன் மகத்துவத்தையும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது என்று அறிந்து வியப்புற்றார். இந்த மலர்களை தன்னுடன் எடுத்தும் சென்றார்.
படவிளக்கம்: கொடைக்கானலில் பூத்துள்ள அதிசய நீலக் குறிஞ்சி மலர்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து