முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய நவீன ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்  -விருதுநகர் மாவட்டம், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்  டி.ராதாகிருஷ்ணன்  தலைமையில், பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர்  காமராஜ். மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம். ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி   சிவகாசி வட்டம், சாட்சியாபுரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நவீன ஆவின் பாலகத்;திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து, விருதுநகர் வட்டம், சூலக்கரை பால் குளிரூட்டும் நிலைய வளாகத்;;தில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி  தெரிவித்ததாவது :-
மாண்புமிகு அம்மா  இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற  உயரிய நோக்கத்தில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இன்று ஏழை பெண்கள் தாங்கள் சொந்த வருமானத்தில் வாழ வகை செய்துள்ளார்கள். இதன் மூலம் பால்வளம் பெருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின் விருதுநகர்) துவக்கப்பட்டு நாளது தேதியில் இம்மாவட்டத்தில் உள்ள 124 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சுமார்  நாள் ஒன்றுக்கு வருட சராசரியாக  16660 லிட்டர் பால் கொள்முதல் செய்து, உள்ளுர் விற்பனையாக 6400  லிட்டர் விற்பனை செய்து விட்டு மீதி பாலை சென்னை பெரு நகர பால் பண்ணைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் இல்லம்தேடி ஆவின் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டிலிருந்து போன் செய்தால் போதும் ஆவின் பொருட்கள் தங்கள் இல்லலங்களுக்கே வந்து சேரும். இத்திட்டம் சென்னையில் மட்டும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வொன்றியத்தில்  ில்லிப்புத்தூரில்  பால் பதனிடும் ஆலையும், விருதுநகரில் பால் குளிரூட்டும் நிலையமும்,  ்சுழியில் மொத்த பால் குளிர்விப்பான் நிலையமும்  இயங்கி வருகிறது. இவ்வொன்றியத்தின் பால் உற்பத்தி 2010-11  ஆகஸ்டு மாதத்தில்  நாள் ஒன்றுக்கு சராசரியாக 8070 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இருந்து நாளது தேதியில் வருட சராசரியாக நாள் ஒன்றுக்கு 16660 லிட்டர் பாலாக உயர்ந்துள்ளது.  இவ்வொன்றியத்தின் பால் விற்பனை படிப்படியாக உயர்ந்து நாளது தேதியில் நாள் ஒன்றுக்கு 6400 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. இவ்வொன்றியம் பால் உற்பத்தியாளர்களுக்கு, பத்து நாள்களுக்கு ஒரு முறை பால் கிரயத் தொகையாக ரூ.40.00 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.  இதனால் சுமார் 5465  பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இவ்வொன்றியத்தில் நபார்டு 2015-16 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை நிதியிலிருந்து  ரூ.92.30 லட்;சம் மதிப்பீட்டில்  விருதுநகர் பால் குளிரூட்டும் நிலைய வளாகத்;;தில்  வெவ்வேறு வகையான பால் மற்றும் பால் உபபொருட்கள், ஐஸ்கிரிம் வகைகள் நுகர்வோர்கள் பயன் பெறுவதற்காக பூங்காவுடன் கூடிய நவீன ஆவின் பாலகமும், சிவகாசி வட்டம், சாட்சியாபுரம் சிறுவர் பூங்காவில் ரூ.90.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்;திற்கான பூமி பூஜையும் என மொத்தம் ரூ.1 கோடியே 82இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர  ில்லிபுத்தூரில் ஏற்கனவே புதிய நவீன ஆவின் பாலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதே போன்று அருப்புக்கோட்டை, இராஜபாளையம், சாத்தூர், காரியாபட்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.1 கோடி மதிப்பில் புதிய நவீன ஆவின் பாலகம் திறக்கப்பட உள்ளது. ரூ.100 கோடி  மதிப்பில் மதுரையில் புதிய ஆவின் தொழிற்சாலையும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய கால்நடைதீவன ஆலையும் துவக்கப்படவுள்ளது என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை பால் ஆணையர்  சண்முகராஜ், ஆவின் பொது மேலாளர் மரு.எஸ்.சேகர், துணைப்பதிவாளர்கள்  இரா.செல்வம் (பால்வளம்),  முனிராஜ் (தலைமையிடம்), மாவட்ட பால்வளத் தலைவர்  பா.கண்ணன், ஆவின் துணைத்தலைவர்  க.கண்ணன், பொது மேலாளர் (பொறியியல்)  செல்வம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து