முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா: அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,  ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு  சுவாமி ராமர் அக்னிதீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த திருவிழாவில் ஏழாம் நாள்  நிகழச்சியொட்டி திருக்கோயிலிருந்து ராமர்,சீதை,லெட்சுமணன் ஆகிய சுவாமிகள் தங்க கருட வாகனத்தில் காலை 6 மணியளவில் புறப்பாடகி சன்னதி தெரு வழியாக அக்னி தீர்த்தக்கடலுக்கு சென்றடைந்தது.அங்கு திருக்கோயிலின் மூத்த குருக்கள் உதயகுமார் தலைமையில்  சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும்,தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு  தீர்த்தம் தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நிகழச்சி நடைபெற்றது.பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளி கடலில் புனித நீராடிய பக்தர்களுக்கு பகல் முழுவதும் காட்சியளித்து அருள்பாலித்தனர்.பின்னர் மாலை 5 மணிக்கு மண்டகப்படியிலிருந்து சுவாமி எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா வந்து திருக்கோயிலுக்கு சென்றடைந்தது.இந்நிகழ்ச்சியில்  திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,திருக்கோயில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ககாரீன் ராஜ்,ஆலய பேஷ்கார்கள் அண்ணாதுரை,கண்ணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன உள்பட ஏராளமான பக்தர்களும்  கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து