முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல்லில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அருகிலுள்ள அக்கரைப்பட்டி ஸ்ரீசடையாண்டி கோவிலுக்கு மல்லையாபுரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். கோவிலில் பொங்கல் வைத்தும், கிடா, சேவல் வெட்டி, மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீசடையாண்டி சாமியை தரிசிக்க பாறைகளால் ஆன கரடு முரடான மலைப்பாதைகளில் ஏறிச்சென்று வழிபட்டனர். இத்திருவிழாவில் பால் காவடி, பன்னீர்காவடி, பறவை காவடி எடுத்தும், முகத்தில் அலகு குத்தியும் வந்தனர். ஆத்தூர் காமராஜர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் அங்கு மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆத்தூரில் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதுபோல் ஏராளமானோர் தங்கள் குலதெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து இறந்து போன தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து