முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன ஆயுதங்களை ஏப்ரல் முதல் சிரியா பயன்படுத்தவில்லை: பென்டகன் விளக்கம்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் :  சிரியா ராணுவம் கடந்த ஏப்ரலில் இருந்தே ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என பென்டகன் கூறியுள்ளது.

இதுகுறித்து பென்டகனின் இணை உயரதிகாரிகளின் தலைவர் ஜோசெஃப் டன்ஃபோர்ட்டு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளதாவது:

ஹோம்ஸ் நகரத்திற்கு அருகில் சிரிய ராணுவம் நடத்தப்பட்ட சம்பவத்தை ஐ.நா. சபை வெளிக் கொண்டுவந்தபோது, நாட்டு மக்கள் மீது அதிபர் ஆசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்தததற்குப் பின் அமெரிக்கா இந்த அறிக்கைகையை வெளியிட்டுள்ளது.

''தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதன் தவற்றை சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் உணர்ந்து விட்டதாக நான் கருதுகிறேன். அதன் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்ட அந்த நாளுக்குப் பிறகு அவர் ரசாயன ஆயுதங்கள் பிரயோகிப்பதைத் தவிர்த்து விட்டார் '' என ஸ்பட்னிக் கூறியுள்ளதை கோடிட்டுக் காட்டி டன்ஃபோர்டு கொலராடோவில் உள்ள ஆஸ்பென் செக்யூரிட்டு ஃபாரம்மில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 7 ம் தேதி, அஷ் ஷாயிராட் விமான நிலையத்தில் மொத்தம் 59 டாமஹாக் குரூஸ் ஏவுகணைகளை அமெரிக்கா செலுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தாக்குதல், இட்லிபில் ரசாயன ஆயுதங்களின் பயன்பாடு, ஆசாத்தின் அரசாங்கத்தை வாஷிங்டன் விமர்சனத்திற்கு பதிலுருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

ஜோசப் டன்ஃபோர்ட் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், மேலும் 2013-ல் கிழக்கு கௌடா சாரின் வாயு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) அமைப்பின் மேற்பார்வைக்குள்ளாக சிரியாவில் உள்ள அனைத்து ரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டன என்று நினைவூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து