முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதிக்குள் கத்தார் யாத்ரீகர்கள் நுழைய நிபந்தனையுடன் அனுமதி

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

சவூதி அரேபியா :  கத்தார் நாட்டைச் சார்ந்த யாத்ரீகர்கள் இனி இரண்டு விமான நிலையங்கள் வழியாக மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள் என சவூதி அரேபியா அறிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிகின்றன.

இதுகுறித்து சவூதி அரேபிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கத்தார் யாத்ரீகர்கள் இனி ஜேட்டாவில் உள்ள கிங் அப்துல்லாசிஸ் ஏர்போர்ட் மற்றும் மெதீனாவில் உள்ள முகம்மது பின் அப்துல்லாசிஸ் ஏர்போர்ட் வழியாகத்தான் சவூதி அரேபியாவுக்கு வரவேண்டும் என்பதை சவூதி அரபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம், அல் ஜெஸிரா எனும் உள்ளூர் ஆன்லைன் செய்திகளை மேற்கோள் காட்டி கூறியுள்ளது.

கத்தார் யாத்ரீகர்கள் கத்தாரி ஏர்லைன் தவிர மற்ற வழிகளில் வரமுடியும் என்று கடந்த வாரம் சவூதி அரேபியா தெரிவித்திருந்தது.

ஜுன் மாதத்தில், கத்தார் நாட்டுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்திருந்தது. இதனால் கத்தார் நாட்டினர் முஸ்லிம் புனித நகரமான மெக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தனர்.

சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துடன் சேர்ந்து, கத்தார் உடனான உறவுகளை முறித்துக் கொண்டது. அந்நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு விமானங்கள் வழியாக மட்டும் இனி கத்தார் யாத்ரீகர்கள் மெக்காவுக்கு வர அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து