முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களிடம் மோதுவது கடினம் - இந்தியாவிடம் சீனா கொக்கரிப்பு

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் :  சீனாவின் இறையாண்மையை யாராலும் அசைக்க முடியாது என்றும் இந்தியா தங்கள் படைகளை திரும்ப பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 7 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது. இதனால் டோக்லாம் பகுதியில் சீனா சாலை போடும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

சீனா கொக்கரிப்பு

இரு நாட்டின் படைகளும் அந்தந்த எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால், பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவை அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக போர் பயிற்சிகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் அறைக்கூவல் விடுத்து வருகின்றன. மேலும் இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதன் மூலம் அவர்கள் படைகளை திரும்ப பெறுவர் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு தேவையில்லாத தகவல்களை சீன ஊடகங்கள் பரப்பு வருகின்றன. தூதரக நீதியிலான பேச்சுவார்த்தைக்கே இந்தியா முற்படுகிறது.

பாதுகாப்பு துறை எச்சரிக்கை

இந்நிலையில் மக்கள் விடுதலை ராணுவம் என்ற சீன ராணுவ அமைப்பு தொடங்கப்பட்டு 90-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் வூ குயன், திங்கள்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், டோக்லாம் பீடபூமியில் உள்ள இந்திய ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.

சீனாவின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டில் நாங்கள் உள்ளதால் எங்களை குறைத்து மதிப்பிடாதீர். இந்தியாவுக்கு ஒன்றை நினைப்படுத்த விரும்புகிறேன். எப்படியாயினும் எங்களை வீழ்த்த வேண்டும் என்று கடுமையாக முயற்சிக்க வேண்டாம். உங்களை கற்பனைகளை மூட்டை கட்டி வையுங்கள்.

90 ஆண்டுகால வரலாறு

எங்கள் ராணுவம் 90 ஆண்டுகளாக வரலாற்று சாதனை படைத்து வருகிறது என்பதை நிரூபித்து வருகிறது. எங்கள் நாட்டின் இறையாண்மையை காக்கவே ராணுவம் உள்ளது. மலையை அசைப்பது கூட எளிது, ஆனால் எங்களை அசைக்க முடியாது எங்களது உறுதிப்பாடும் சிறிதளவும் குறைய வில்லை. ராணுவ படையை திரும்ப பெற்றால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து