முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் மிகவும் பிடிக்கும் என்.பி.ஆர். கல்லூரி மாணவர்களிடம் பிரட் லீ உற்சாகப்பேச்சு*

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

* திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட், ஆல்பர்ட் டூட்டிபேட்ரியாட்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளுக்கு பவுலிங் பயிற்சி அளிப்பதற்காக முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். அங்கு என்.பி.ஆர். கல்லூரிக்கு சென்ற லீ, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
 ‘வணக்கம்’ என்று அழகுத் தமிழியில் அவர் கூறியதும், அதைக் கேட்ட மாணவ மாணவிகள் கரகோஷத்தால் காதை பிளக்கவைத்தனர். தொடர்ந்து அவர் பேசும்போது, சச்சின் ஆடிய ஆட்டங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவருக்கே நான் பந்து வீசுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. பாக்சிங் டே டெஸ்டில் அவருக்கு முதல் பந்தை வீசிய பின்னர், அவரிடம் எனக்கு ஆட்டோகிராப் போடுங்கள் சார் என்று கேட்க நினைத்தேன்? என்று கூறியதும் அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி சச்சின் பெயரை கூறினர்.
 மாணவர்களுக்கு அறிவுரை கூறிய லீ, ‘மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும். லட்சியங்களை அடைய முயற்சிக்கும்போது ஏராளமான தடைகள் வரும். அவற்றை மீறி முயற்சிக்க வேண்டும். எனக்கு வந்த தடைகளை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ என்றார். மேலும் அவர் பேசும்போது, ‘என் மீது பலரும், குறிப்பாக முதுகில் நான் காயம் அடைந்தபோது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டின் மீது நான் கொண்ட அன்பு மீண்டும் என்னை கிரிக்கெட் விளையாட வைத்தது. கிரிக்கெட் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக்கின்போதும் நான் இந்த கல்லூரிக்கு வந்து பேசினேன். விளையாடுவதற்கும், வர்ணனை செய்வதற்கும் டி.என்.பி.எல். ஒரு அருமையான தளம்’ என்றார்.இதன்பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்து லீ அசத்தினார். உடல்தகுதியை பற்றி பேசிய பிரெட் லீ, கடும் பயிற்சி மேற்கொள்வதற்கு உடல் தகுதி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார். ‘பட்டர் சிக்கனை’ குறைவாக உண்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளையும் லீ சுவாரசியத்துடன் கூறினார்.தோனி குறித்து பேசத்தொடங்கி லீ, எம்.எஸ்.டி. என்று கூறியதும் மாணவர்களின் கரவொலியால், ஆரவாரத்தாலும் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய லீ, தோனிக்கு எதிராக ஆடுவது என்பது நான்பெற்ற பாக்கியம். அவர் மிகவும் எளிமையான நபர்; மிகச்சிறந்த மனிதர் என்றார். தான் ஒரு கிரிக்கெட் வீரராக ஆகாவிட்டால் பாலிவுட் ஹீரோவாக இருந்திருப்பேன் என்று லீ கூறியதும், அதனை மாணவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.தொடர்ந்து பேசிய லீ, ‘ மிகச் சிறப்பான முறையில் இளம் கிரிக்கெட் வீரர்களை இந்தியா சிமென்ட்சின் தமிழ்நாடு பிரீமியர் லீக் உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்; மிகவும் நல்ல மனிதர்களும், ஆச்சர்யமான கலாச்சாரங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. நான் மேலும் பல தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு இந்தி மொழி நன்றாக வரும். ஆனால் தமிழில் நான் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது.’ என்றார்.பிரெட் லீயை என்.பி.ஆர். கல்லூரி சார்பாக மிகச்சிறப்பான முறையில் கவுரவித்தது. இதனை தான் பேசும்போது குறிப்பிட்ட லீ, கல்லூரி நிர்வாகம் அளித்த வரவேற்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும், டி.என்.பி.எல்.-ன் இரண்டாவது சீசனில் பங்கெடுப்பதை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து