முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் அருகே லாரியில் வந்த 2 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்-டிரைவர் கைது

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,ராமநாதபுரம் அருகே ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 2 டன் எடையுள்ள செம்மரகட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
     ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்று ஆந்திர மாநில லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் அந்த லாரியை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியின் மேல்பகுதியில் மூடைகளில் வெங்காயம் இருந்ததை பார்த்தனர். அதன் அடியில்  பார்த்தபோது ஏராளமான செம்மர கட்டைகள் இருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் 2 டன் எடையுள்ள இந்த செம்மர கட்டைகளை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. விலை மதிப்பிலான செம்மரகட்டைகளை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்திருப்பதை உறுதி செய்த போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சல்க்காபுரம் பகுதியை சேர்ந்த வெங்கட்டராமுடு மகன் பாலகிருஷ்ணுடு(வயது48) என்பது தெரியவந்தது.
        இவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து இந்த சரக்குகளை ராமேசுவரத்திற்கு கொண்டு செல்லுமாறும், அங்கு குறிப்பிட்ட நபர்கள் இதனை பெற்றுக்கொள்வார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இதன்படி லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து ராமநாதபுரம் பகுதியில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து செம்மர கட்டைகளை அனுப்பியது யார், அதனை பெற்றுக்கொள்ள வருபவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து