முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்மன் பிரீத் கவுருக்கு ரூ.5 லட்சம் பரிசு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

சண்டிகர் : மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் வீராங்கனை ஹர்மன் பிரீத் கவுருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதியில் 115 பந்தில் 171 ரன்கள் குவித்து இருந்தார். இறுதிப்போட்டியில் அவர் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 வீராங்கனைகள் ரெயில் வேயில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு பதவி உயர்வும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

டி.எஸ்.பி பதவி

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் கவுருக்கு டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமரிந்தர் சிங் ட்விட்டரில் பதிவிடுகையில், ’’பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடியதையும், இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி தந்ததையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவரது ஆட்டத்தால் பஞ்சாப் மாநிலம் பெருமை அடைகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் ஹர்மன்பிரீத் கவுருக்கு டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர் தந்தை ஹர்மந்தர் சிங் கூறுகையில், ’’டி.எஸ்.பி. பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி. எங்கள் மகளால் நாங்கள் பெருமை அடைந்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து