முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் எச்.எஸ்.பிரணாய்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிரணாய்.

பேட்மிண்டன் தொடர்

அமெரிக்காவின் அனெஹெய்மில் அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் - பருபள்ளி காஷ்யப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் பிரணாய் 21-15, 22-20, 21-12 என பருபள்ளி காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். காஷ்யப்பை வீழ்த்த பிரணாய்க்கு 65 நிமிடங்கள் தேவைப்பட்டது.

அனைவருக்கும் நன்றி

வெற்றி பெற்ற பின் பிரணாய் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அமெரிக்க ஓபனை வென்றதை சிறந்ததாக உணர்கிறேன். என்னுடைய அகாடமியில் இடம்பிடித்துள்ள பருபள்ளியை வீழ்த்திய போட்டி கடுமையானதாக அமைந்தது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து