முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைகளைப் பாதுகாக்கும் விஷயம்: இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், எல்லைகளைப் பாதுகாப்பதற் கான திறனைப் பற்றி கற்பனையில் மிதக்கக் கூடாது என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் எல்லையை ஒட்டிய டோக்லாம் பகுதியில் சீனா ராணுவம் கட்டுமானங்களை எழுப்பியதை இந்திய ராணுவம் தடுத்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட் டுள்ளது. மேலும் பூடானுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சீனா நடந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா அங்கு ராணுவத்தை நிறுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த அந்நாடு இந்தியா வுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வருகிறது.
அந்நாட்டு அதிகாரபூர்வ அரசு பத்திரிகையில் தொடர்ந்து இந்தியாவைக் குறிவைத்து எச்சரிக்கை விடுக்கும் சீனாவுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்கிறது. ‘முதலில் உங்கள் (சீனா) ராணுவத்தை வாபஸ் பெற்றால் நாங்களும் (இந்தியா) வாபஸ் பெறத் தயார்’ என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் டோக்லாம் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் வு கியான் கூறியதாவது:

எல்லைப் பிரச்சினையில் எல்லைகளைப் பாதுகாப்பதற் கான திறனைப் பற்றி எந்தஒரு கற்பனையையும் இந்தியா வளர்த்துக் கொள்ளக்கூடாது. அந்தப் பகுதியில் சீன ராணுவம் அவசரநிலைக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் அங்கு ராணுவத்தை அதிகப்படுத்துவதுடன் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்தியா தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தேவையான நடைமுறை விஷயங்களை எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து