முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவதானப்பட்டி பேரூராட்சியில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்  தலைமையில் செய்தியாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
 செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மஞ்சளாறு காமாட்சி அம்மன் கோவில் அருகில் 3 எண்ணிக்கையில் 3 மீட்டர் 12 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி கிணறு கட்டுமானப்பணி, நீரேற்று நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் அறை பணி, 90,000 கொள்ளவு கொண்ட நீர் சேகரிக்கும் தொட்டி முடிவுற்ற பணி, 1.661 கி.மீட்டர் நீளத்தில் இணைப்பு குழாய் அமைக்கப்பட்டுள்ள பணி,; 4.125 கி.மீட்டர் நீளத்தில் நீர் உந்து குழாய் அமைக்கப்பட்டுள்ள பணி, காமாட்சியம்மன் கோவில் செல்லும் சாலையில் 3,00,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணி, புதிய பேரூராட்சி வளாகம் அருகில் 2,00,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள பணி, 3.900 கி.மீட்டர் நீளத்தில் பகிர்மான குழாய் பதிக்கப்பட்டுள்ள பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், தமிழக அரசு நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு போதிய சீரான குடிநீர் வழங்கிடும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின்படி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டுத்திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடியும், உள் கட்டமைப்பு இடைவெளி பூர்த்தி நிதியின் கீழ் 4.80 கோடியும் என மொத்தம் ரூ.5.10 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இப்பேரூராட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு 7.00 இலட்சம் லிட்டர் போதுமானதாக இல்லை என்பதால் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 90 லிட்டர் கணக்கில் மொத்தம் 16.20 இலட்சம் லிட்டர் (உச்ச காலநிலை) குடிநீர் வழங்கிடும் பொருட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இடைக்கால (2029) தேவையான 13.96 இலட்சம் மற்றும் உச்சகால (2049) தேவையான 16.20 இலட்சம் லிட்டர் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கிட இயலும்.
 இத்திட்டத்திற்காக மஞ்சளார் ஆற்றின்படிகையில் மூன்று 6.00 மீட்டர் விட்டமுள்ள திறந்தவெளி கிணறுகள் அமைத்து, நீர் சேகரிப்பு தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு, பின்னர் அங்கிருந்து 4.10 கி.மீட்டர் நீளத்திற்கு நீர் உந்து குழாய் பதிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள 3 இலட்சம் லிட்டர், 2 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு, பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்  தெரிவித்தார்.
 செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முத்துபழனியப்பன்   உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) கருப்பையா   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் அன்சாரி   உதவி பொறியாளர் விவேக் ஆனந்தன்   தேவதானப்பட்டி செயல் அலுவலர் மாரியப்பன்   உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.கதிரவன்   உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) அ.இளையேந்திரன்  உட்பட அனைத்து செய்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து