முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடனான உறவை மேம்படுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், இந்தியாவின் பக்கம் அமெரிக்கா நிற்பதாகவும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளதாகவும் பாகிஸ்தான் நாளிதழ் ‘தி நேஷன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் அந்த நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பிராந்திய அமைதியை நிலைநாட்டும் விவகாரத்தில் பாகிஸ் தான் மேற்கொள்ளும் முயற்சி அமெரிக்காவுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்தியா, ஆப்கானிஸ் தான் நாடுகளுடனான உறவை மேம்படுத்த அந்த நாடுகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் முடிந்த வரை அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுவதாகவே நம்புகிறோம்.

தீவிரவாதத்துக்கு எதிரான எங்கள் வெற்றியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள மறுப்பது வருத்தமளிக்கிறது. ‘இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும்’ என்ற மந்திரத்தை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இன்னும் அதிகமாக செயல்படும் என்று நம்புகிறோம். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளத் தயார் என நாங்கள் எப்போதுமே கூறி வருகிறோம். ஆனால் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் அதற்கு பதில் அளிப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  இதுபோல ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரி நயீம் லோதி கூறியபோது, “சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக இருப்பதால் அமெரிக்கா ஆத்திரமடைந் துள்ளது. இதனால், அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவிடம் பணிந்து செல்லுமாறு பாகிஸ்தானுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கிறது. சுயநலன் மற்றும் இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறது” என்றார்.

சமீப காலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானில் நிலவும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

அதாவது, பாதுகாப்புப் படை யினருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் சுதந்திரம், ராணுவ நீதிமன்றங்களைப் பயன்படுத் துவது, தொண்டு நிறுவனங் களை ஒடுக்குவது, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான் மையினரை அச்சுறுத்துவது ஆகிய செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தீவிரவாதம் தொடர்பான ஆண்டறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டுள் ளது. லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகள் பாகிஸ் தான் மண்ணில் இயங்கி வருவதா கவும் அந்த அமைப்புகள் மீது பாகிஸ்தான் எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோல பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கப்படும் நிதியைப் பெறுவதற்கும் அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து