முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம், ராதாகிருஷ்ணன், பிரணாப் பாணியில் நானும் செயல்படுவேன்: புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உறுதி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல்கலாம், ராதாகிருஷ்ணன், பிரணாப்  முகர்ஜி  பாணியில் நானும் செயல்படுவேன் என்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த்  உறுதியளித்தார்.

நான் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். கலாம், ராதாகிருஷ்ணன், பிராணாப் முகர்ஜி பாணியில் நானும் செயல்படுவேன். வேற்றுமை பல இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பதே நமது நாட்டின் பலம். - புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

நாட்டின் 14-வது நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த்  நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாபின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நேற்று  நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.

21 குண்டுகள் முழங்க பதவிப் பிரமாணத்தில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் பேசியதாவது,

 “நான் எளிமையான குடும்பப் பின்னணியிலிருந்து உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். கலாம், ராதாகிருஷ்ணன், பிராணாப் முகர்ஜி பாணியில் நானும் செயல்படுவேன். வேற்றுமை பல இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பதே நமது நாட்டின் பலம். சாதாரண குடிமக்களே நாட்டை செதுக்குகின்றனர்.

என்னை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. எனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்” என்றார்.இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக பாஜக கூட்டணி சார்பில் பிகார் முன்னாள் கவர்னர் ராம் நாத் கோவிந்தும், காங்கிரஸ் கூட் டணி சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும்  ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்டனர். கடந்த 20-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து