முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கலவரத்தை தூண்ட பணம் பெற்ற 7 பிரிவினைவாத தலைவர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு, காஷ்மீரில் கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றது தொடர்பாக 7 பிரிவினைவாதத் தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான்வானி கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்பு களிடம் இருந்து காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் பெருந்தொகை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த மாதம் ஸ்ரீநகரில் 14 இடங்களிலும், டெல்லியில் 8 இடங்களிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பிரிவினைவாதத் தலைவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் சில நாட்களுக்கு முன்பு தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஹூரியத் தலைவர் கிலானியின் மருமகன் அல்டாப் ஷா, இதர பிரிவினை வாத தலைவர்கள் பரூக் அகமது தார், நயீம் கான், ஆயாஷ் அக்பர், பீர் சைபுல்லா, மெஹ்ராஜ் கல்வால், ஷாகித் அல் - இஸ்லாம் ஆகிய 7 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்ட அவர்களை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து