முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தேரில் வலம்:

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,ஆக,25: ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவையொட்டி பர்வதவர்த்தினி அம்மன்  நான்கு ரத வீதியில் மரத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜூலை,17 ஆம் தேதி ஆடித்திருவிழா   கொடியேற்றத்துடன் துவங்கியது.   திருக்கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் பர்வதவர்த்தின் அம்மன் சன்னதியில் தினசரி  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.அதுபோல அம்மன் அலங்காரத்தில்  தினசரி ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதையடுத்து திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான செவ்வாய்க்கிழமை காலை யில் அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சி திருக்கோயிலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியையொட்டி திருக்கோயிலில்  இராமாநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் அதிகாலையில்  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பர்வதவர்த்தினஇ அம்மன்  அலங்காரத்துடன் திருக்கோயிலிருந்து காலை 10.35 மணிக்கு கீழரத வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மரத்தேரில் எழுந்தருளினர்.அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் மரத்தேரை திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி,திருக்கோயில் இணைஆணையர் மங்கையர்கரசி,உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர்கள்  வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துக்கொண்டு  நான்கு ரத வீதியில் வலம் வந்தனர்.தேரோட்டம் நிகழ்ச்சியில்  திருக்கோயில் உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம்,ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள்  அண்ணாத்துரை,கண்ணன்,
கலைச்செல்வ ம்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், கோயில் அலுவலர் இராமநாதன், செல் லம் ,கணேசமூர்த்தி,பழனிமுருகன்,சிவா,ஆகியோர்கள் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து