முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இலங்கை அணி முதல் டெஸ்ட் காலேவில் இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

காலே : இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதனால் இந்த சாதனையை விராட் கோலி அணி தொடர்ந்து நீடிக்க செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை இழக்காமல் ...

2014-15 ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு 8 டெஸ்ட் தொடரில் ஆடிவிட்டது. ஆனால் தொடரை இழக்காமல் சிறப்பாக ஆடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே நிலைமை நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் இல்லை

இந்திய அணி கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். தொடக்க வீரர் ராகுல் காயம் காரணமாக இன்றைய டெஸ்டில் ஆடமாட்டார். ஏற்கனவே முரளி விஜய் காயத்தால் விலகி இருந்தார். இதனால் தவானும், தமிழக வீரர் அபினவ் முகுந்தும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். கேப்டன் விராட் கோலி நல்ல நிலையில் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50-வது டெஸ்ட்

2 நாள் பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு இன்றைய போட்டி 50-வது டெஸ்ட் ஆகும். அவர் 44 டெஸ்டில் விளையாடி 275 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் 300 விக்கெட்டை தொடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 25 விக்கெட் தேவை.

ஹெராத் கேப்டன் ...

இலங்கை அணி கேப்டன் சண்டிமால் காயம் காரணமாக விளையாடாததால் இன்றைய டெஸ்ட் போட்டிக்கு ஹெராத் கேப்டனாக பணியாற்றுவார். இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), தவான், அபினவ் முகுந்த், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், விருத்திமான் சகா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ராகுல்.

இலங்கை:

ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணா ரத்னே, குஷால் மெண்டீஸ், மேத்யூஸ், ஆஸ்லே குணரத்னே, டாக்வெலா, தனஞ்ஜெயா, டிசில்வா, தனுஷ்கா குணரத்னே, தில்ருவன், பெரைரா, சுரங்கா லக்மல், லகிருகுமாரா, புஷ்பக்குமாரா, நுவன் பிரதீப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து