முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியிடம் வியக்கத்தக்க திறமைகள் - பிரெட்லீ பேட்டி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

திண்டுக்கல் : டோனியிடம் வியக்கத்தக்க திறமைகள் உள்ளன என்றும், எனக்கு மிகவும் சவாலாக திகழ்ந்த பேட்ஸ்மேன், சச்சின் டெண்டுல்கர் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட்லீ கூறினார்.

பந்து வீச்சாளர்களுக்கு ...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக அவர் அந்த கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

உடற்பயிற்சிதான் ...

பிரெட்லீயிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இத்தனை வயதிலும் உங்கள் உடல் கச்சிதமாக இருப்பதன் ரகசியம் என்ன?

பதில்:- உடற்பயிற்சிதான் காரணம். நான் தினமும் அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்வேன். ‘ஜிம்’மில் நேரம் செலவிடுவேன்.

கிடைத்த அதிர்ஷ்டம் ...

கேள்வி:- டோனி பற்றி சில வார்த்தைகள்...?

பதில்:- டோனி என்றதும், அவருடைய ‘ஹெலிகாப்டர் ஷாட்’ தான் நினைவுக்கு வருகிறது. அவருடன் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவரிடம் வியக்கத்தக்க திறமைகள் உள்ளன.

கேள்வி:- நீங்கள் கிரிக்கெட் வீரராக வராமல் இருந்திருந்தால்...?

பதில்:- பாலிவுட் ஸ்டார் ஆகி இருப்பேன்.

கேள்வி:- இன்றைய இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார்?

பதில்:- பும்ராதான். அவருடைய பந்துவீச்சை கண்டு நான் வியக்கிறேன். அவர் பந்து வீசும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. அதே வேளையில் மிக நேர்த்தியாகவும், துல்லியமாகவும் அவர் பந்து வீசுகிறார்.

கேள்வி:- நீங்கள் பந்துவீசும்போது, உங்களுக்கு சவாலாக திகழ்ந்த இந்திய பேட்ஸ்மேன் யார்?

பதில்:- வி.வி.எஸ்.லட்சுமணன், வீரேந்திர சேவாக், கங்குலி, டிராவிட், டோனி போன்றோருக்கு நான் பந்து வீசி உள்ளேன். அவர்களுடன் விளையாடியது என் அதிர்ஷ்டம். ஆனால், எனக்கு மிகவும் சவாலாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்தான். அவருக்கு பந்து வீசுவது கடினமான காரியம்.

கேள்வி:- தமிழ்நாடு பற்றி...?

பதில்:- அழகான மக்கள் வசிக்கும் அற்புதமான ஒரு இடம். தொன்மையான வரலாறும், பாரம்பரியமும் கொண்ட மண். எனக்கு தமிழ் கற்க ஆசை உண்டு. இந்தி எனக்கு கொஞ்சம், கொஞ்சம் தெரியும். இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால் வியர்த்து கொட்டுகிறது. இருந்தாலும், இங்கு இருப்பதை நான் விரும்புகிறேன்.

கேள்வி:- தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்தமான உணவு?

பதில்:- இங்கு கிடைக்கும் அனைத்துமே பிடித்தமான உணவுகள்தான். குறிப்பாக ஜிகர்தண்டா என்றால் கொள்ளை பிரியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து