முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்டை நீக்க பார்லி.யில் காங். கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற லோக்சபையிலிருந்து 6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டது.

பாராளுமன்ற லோக்சபையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் பாராளுமன்ற லோக்சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவ்ரவ் கோகாய், கே.சுரேஷ், ஆதிர் ரஞ்சன் செவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், எம்.கே. ராகவன் ஆகியோர் சபையின் மத்திய பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டதோடு சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை கிழித்து வீசினர். பசு கறிக்கடைக்காரர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த எம்.பி.க்கள் 6 பேரும் அமளியில் ஈடுபட்டனர்.

6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரச்சினையை நேற்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே எழுப்பி இரக்கக்குணம் கொண்டு சபை தலைவர் சுமித்ரா மகாஜன், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சட்டென்று பதில் அளித்த சுமித்ரா மகாஜன், நீங்கள் எதையும் என் மீது தூக்கி எறிவீர்களோ என்று ஆவேசமாக கூறினார்.

திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் சவ்கதா ராய் எழுந்து சில உறுப்பினர்கள்   உணர்ச்சிவசப்பட்டு இந்த மாதிரி அமளியில் ஈடுபடலாம். அதனால் அதை கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சஸ்பெண்டை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று (நேற்று) புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுள்ளார்.

இது புனிதமான நாளாகும். அதனால் 6 எம்.பி.க்களின் சஸ்பெண்ட்டை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று கார்க்கேவுக்கு ஆதரவாக பேசினார்.

இடதுகம்யூனிஸ்ட் உறுப்பினர் முகமத் சலீமும் கார்க்கேவுக்கு ஆதரவாக பேசினார். மத்திய அரசு அதிகப்பட்சம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். 6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை நீக்க சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்யும் விஷயத்தில் அரசு தரப்பில் கடுமையான நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக நான் எதுவும் கூற முடியாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறிவிட்டார்.

பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் குறுக்கிட்டு பேசுகையில் நேற்றுமுன்தினம் சபையில் நடந்த நிகழ்ச்சியானது ஒரு கறுப்பு தினமாகும். சபையில் அந்த 6 உறுப்பினர்களும் நடந்துகொண்ட விதம் அதன் பின்னர் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விதத்தையும் அனந்தகுமார் விளக்கினார்.

6 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்டை நீக்கச் சொல்வதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்த்து அனந்த குமார் கேட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து