முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக பிரதமர் உறுதி - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

சென்னை : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதியாக நேற்று ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லி சென்றிருந்தார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: -

கேள்வி: நீட் தேர்வு குறித்து?

பதில்: நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். அவர் இதுகுறித்து பரிசீலிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

கேள்வி: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இப்பொழுது பத்திரிகையாளர்களுக்கு கடுமையாககெடுபிடி இருக்கின்றது. அனுமதி மறுக்கப்படுகிறது. மழைக்காலத்தில்கூட நீங்கள் உள்ளேவரக்கூடாது. வெளியில்தான் இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள் இதற்கு என்னகாரணம் ?

பதில்: நேற்றையதினம் பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். பேட்டி கேட்டார்கள்,கொடுத்தேன், காலையில் வந்தார்கள், இங்கு தான் இருக்கின்றீர்கள், இப்பொழுதும் இங்குதான் இருக்கின்றீர்கள். பத்திரிகையாளர்களுக்கு எந்தத் தடையும் கிடையாது. தாராளமாகவரலாம், போகலாம்.

கேள்வி: கதிராமங்கலத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருப்பது பற்றி ?

பதில்: இது ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், நாங்கள் அறிவிக்கவில்லை. இப்பொழுது வந்ததிட்டமல்லை. கதிராமங்கலத்தைப் பொறுத்தவரை, 2001-ம் ஆண்டே இந்தத் திட்டம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் இந்தத் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. குழாய் பழுதடைந்துள்ளது. அதை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு சிலரின் தூண்டுதலால் போராட்டம் நடத்துகிறார்களேயொழிய, விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என்று ஏற்கனவே நாங்கள் சொல்லியிருக்கின்றோம். ஹைட்ரோ-கார்பன் பொறுத்தவரையில், தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே 1989-ம் ஆண்டே வந்தது. இப்பொழுது வரவில்லை. இவையெல்லாம் முன்பே வந்தது.

கேள்வி: மதுக்கடைகளையெல்லாம் மூடியதால் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தினால் அய்யாக்கண்ணு....

பதில்: அப்படியெல்லாம் இல்லை, அதெல்லாம் தவறு. எங்களைப் பொறுத்தவரையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கிட்டு, அதற்குண்டான நிவாரணத்தொகையை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி: அப்படியென்றால் அய்யாக்கண்ணு பாதிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா? விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா?

பதில்: மாநில அரசு மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாங்கள் நிவாரணம் வழங்கியிருக்கின்றோம். மத்திய அரசு மூலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடனை ரத்து செய்யவேண்டுமென்று போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து