முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த மாதம் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதன் முறையாக முதல்வர் எடப்பாடி கொடி ஏற்றுகிறார்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆகஸ்ட் 15-ம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதன் முதலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

அணிவகுப்பு மரியாதை ...

சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகள் கோட்டையில் இப்போதே தொடங்கி விட்டன. வர்ணம் பூசுதல், இருக்கைகள் அமைப்பதற்கான இடங்களை சுத்தம் செய்தல், பந்தல் போடும் பணி போன்றவை நடைபெற்று வருகின்றன.ஆகஸ்ட் 15-ம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதன் முதலாக முதல்வர்  அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து வீர, தீர செயல்களில் ஈடுபட்டோருக்கு கல்பனா சாவ்லா விருதினை வழங்கி கவுரவிக்கிறார்.

22-வது முதல்வராக ...

சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.எடப்பாடி பழனிசாமி முதல்வராக கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பதவியேற்றார். 22-வது முதல்வராக செயல்படும் எடப்பாடி பழனிசாமி இப்பொறுப்பினை ஏற்ற 6 மாதத்தில், அடுத்த மாதம் நடக்கும் சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவில் கோட்டையில் கொடியேற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து