முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் போராளிகளுக்கு நிதியுதவி செய்வது அபாயகரமானது, வீணானது - அமெரிக்க அதிபர் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக இயங்கி வரும் போராளிகளுக்கு நிதியுதவி செய்வது அதிகப்படியானது, அபாயகரமானது, மிகவும் வீணானது  என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

புடினுடன் ஆலோசனை

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசினார். அப்போது, சிரியா நாட்டின் தெற்கு பகுதியில் போர் பதற்றத்தை தணிப்பதற்கு செய்ய வேண்டிய சமாதான முயற்சிகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்கா உதவி

இதற்கிடையில், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும், பணத்தையும் அளித்து கடந்த நான்காண்டு காலமாக உதவி செய்து வந்தது வீணான வேலை என்று அமெரிக்காவின் சிறப்பு படை தலைமை அதிகாரி ஜெனரல் டோனி தாமஸ் தெரிவித்திருந்தார்.

அதிபர் உத்தரவு

இந்த அறிவிப்பை தொடர்ந்து சிரியாவில் உள்ள போராளி குழுக்களுக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளை நிறுத்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான தகவல் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா அளித்துவரும் ஆதரவுக்கு மாறுபட்ட வகையில் தனது எதிர்ப்பை தெரிவிக்கவே அமெரிக்கா போராளிகளுக்கு உதவி வருகிறது என்பது வெட்ட வெளிச்சமானது.

நிறுத்த காரணம் ...

இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், ‘சிரியாவில் போராளிகளுக்கு நிதியுதவி செய்வது அதிகப்படியானது, அபாயகரமானது, மிகவும் வீணானது என்பதால் இதை நிறுத்துமாறு நான் உத்தரவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.

ஒபாமா தொடங்கி ...

சிரியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் குதித்த புரட்சிப் படையினர் மற்றும் போராளி குழுக்களுக்கு நிதி உதவி செய்யும் திட்டத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து