முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் எதிர்க்கட்சிகள் அமளி: லோக்சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 26 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  6 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உள்பட பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் லோக்சபையில் எழுப்பியதால் நேற்று பிற்பகலில் இரண்டுதடவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு லோக்சபையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் சபையின் மத்தியபகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷம் போட்டதோடு காகித்தை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர். இதனையொட்டி காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேர் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய நேற்று முன்தினம் லோக்சபையில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுகம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். நேற்றுமுன்தினம் புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுள்ளார். இது புனிதநாளாகும். இதனையொட்டி 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனையொட்டி லோக்சபையில் வேறு எந்த நிகழ்ச்சியும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

நேற்றும் இந்த பிரச்சினையையும் வேறு சில பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. நேற்று சபை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து சபையின் மத்திய பகுதிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம்போட்டனர். பிரதமர் பதில அளிக்க வேண்டும், சாதி, மத பெயரில் அரசியல் நடத்துவதை பிரதமர்  நிறுத்த வேண்டும், சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என்று சபையில் காங்கிரசை சேர்ந்த பல உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டியிருந்தனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கே.சி. வேணுகோபால், ராவ்நீத் சிங் பிட்டு ஆகியோர் எழுந்து எங்கள் கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சபாநாயகர் நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஒரு நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். நேற்று சபை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பிக்கொண்டியிருந்ததால் காலையில் எந்த நிகழ்ச்சியையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பிற்பகல்  சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.  கேள்வி நேரத்திற்கு பின்னர் இந்திய தகவல் தொழில்நுட்ப 2017 திருத்த  மசோதா நிறைவேற்ற அரைகுறை விவாத்திற்கிடையே நிறைவேறியது. அதனையடுத்து கம்பெனிகள் 2016 திருத்த மசோதா விவாதத்தை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தொடங்கிவைத்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுக்கொண்டியிருந்ததால் நேற்று மதியத்திற்கு பிறகு சபை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை பிற்பகல் 3-45-க்கு தொடங்கியது. அப்போதும் அமளி நிலவியதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து