முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர் 39 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: லோக்சபையில் சுஷ்மா சுவராஜ் பதில்

புதன்கிழமை, 26 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று லோக்சபையில் தெரிவித்தார்.

ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் கைவசம் இருந்த மொசூலில் இந்தியர்கள் 39 பேர்களை தீவிரவாதிகள் கடத்திச்சென்றுவிட்டனர். இது நடந்து 3 ஆண்டுகளாகின்றன. அதுகுறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஈராக் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுடெல்லி வந்திருந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஈராக் அமைச்சர், கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்ற துயர செய்தியை தெரிவித்தார்.

இந்த பிரச்சினையை நேற்று லோக்சபையில் எதிர்க்கட்சி  உறுப்பினர்கள் எழுப்பி கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமையை விளக்கும்படி கட்டாயப்படுத்தினர். இதன்பேரில் விளக்கம் அளித்த சுஷ்மா சுவராஜ், மொசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆதாரம் இல்லாமல் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்று கூறி அதனால்  பாவத்திற்கு நான் ஆளாக விரும்பவில்லை என்றார்.

இந்தியர்கள் கொல்லப்பட்டவிட்டனர் என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கும்வரை அவர்கள் பற்றிய தகவலறிய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்யும். 39 இந்தியர்களும் இறந்துவிட்டார்கள் என்பதற்கான ஆதாரம் கிடைக்கும் வரை அது தொடர்பான பைல்கள் மூடப்படாது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறி அதனால் ஏற்படும் பழிச்சொல்லை நான் வாங்க விரும்பவில்லை என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.

பாராளுமன்றத்தையும் கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தார்களையும் தவறாக வழிநடத்த நான் விரும்பவில்லை. நான் எப்போதும் தவறான வழிகாட்டிதில்லை. தவறான வழிகாட்டுவதால் எனக்கு என்ன லாபம் என்று எதிர்க்கட்சிகளை கேட்கிறேன். அல்லது இந்த அரசுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது என்று சுஷ்மா சுவராஜ் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து