முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாட்டம் - ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதன்கிழமை, 26 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கார்கில் போர் வெற்றிதினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கார்கில் யுத்தம் ...

1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி ஆக்கிரமித்துக் கொண்டனர். அப்போது பாகிஸ்தானில் முஷாரப் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டியிருந்தார். இதையறிந்த இந்திய ராணுவம் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படையை விரட்டியடித்து வெற்றிபெற்றது. அப்போது பிரதமராக வாஜ்பாய் இருந்தார்.

பிரதமர் பாராட்டு ...

கார்கில் போரில் வெற்றியடைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வெற்றிதினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்திய ராணுவத்தினர்களின் வீரதீரத்தையும் அர்ப்பணிப்பு தன்மையையும் பிரதமர் நரேந்திரமோடி பாராட்டி நினைவுகூர்ந்துள்ளார். நாட்டின் கவுரத்தை காப்பாற்றவும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் வீரதீரத்துடன் நமது ராணுவ வீரரகள் போரிட்டு வெற்றிபெற்றதை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கங்களில் கூறியுள்ளார்.

கார்கில் போர் வெற்றி தினமானது நமது ராணுவத்தின் வலிமையையும் இந்தியாவை பாதுகாப்பதில் ராணுவ உறுதிப்பாட்டையும் நினைவுபடுத்துகிறது என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

லடாக் பகுதியில் ....

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை சந்திக்கும் இடத்தில் இந்திய பகுதிக்குட்பட்ட லடாக் பகுதியில் கார்கில் உள்ளது. இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தது. இதுகுறித்து தெரிந்தவுடன் இந்திய படையினர் விரைந்து சென்று பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து கார்கில் பகுதியை மீட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடிக்க சுமார் மூன்றரை மாதம் ஆகியது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து