முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

184 வட்டார சுகாதார புள்ளியிலாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

புதன்கிழமை, 26 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 184 வட்டார சுகாதார புள்ளியியலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

புதிதாக தேர்வு

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு,  தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென அமைக்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 21,023 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது 184 வட்டார சுகாதார புள்ளியியலாளர்களை புதிதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

வாழ்த்துகள் ...

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாவது:-

“நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வட்டாரத்திற்குச் சென்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்ய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், குடும்ப நல இயக்குநர் ஜோதி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி) இயக்குநர் எம்.ஆர்.இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து