முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி

புதன்கிழமை, 26 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

காலே : இலங்கைக்கு எதிரான காலேவில் நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளில்

தவான் - புஜாரா அபார சதத்தால் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.

மழையால் தாமதம்

இலங்கைக்கு 6 வார கால பயணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சென்றுள்ளது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இலங்கை அணி முதலில் வீச உள்ளது. இதற்கிடையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக துவங்கியது.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா வீரர்கள்:

ஷிகர் தவான், அபினவ் முகுந்த், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்ட்யா, சகா, ரவிசந்திரன் அஷ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகம்மது சமி,

இலங்கை வீரர்கள்:

திமுத் கருனரத்னே, உபுல் தரங்கா, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, ஏஞ்சலே மேத்யூஸ், அசேலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், லஹிரு குமாரா, நுவன் பிரதீப்

131 ரன்கள் ....

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் அபினவ் முகுந்தும் களம் இறங்கினார். அபினவ் முகுந்த் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு புஜாரா களம் இறங்கினார். ஷிகர் தவான் -புஜாரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 29.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்திருந்தது. ஷிகர் தவான் 78 ரன்களுடனும் புஜாரா 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஷிகர் தவான் சதம்

தொடர்ந்து விளையாடிய ஷிகர் தவான்  சதம் அடித்தார். 40 வது ஓவரில் இந்தியா 199  ரனகள் எடுத்து இருந்தது. தவான் 125 ரன்களுடனும்,புஜ்ரா 58 ரன்களுடனும் விளையாடி கொண்டு இருந்தனர். சதம் அடித்த ஷிகர் தவான், தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜா அரை சதம் கடந்தார்.

இரட்டை சதம் ....

அணியின் ஸ்கோர் 280 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 190 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், ஆட்டமிழந்தார். 168 பந்துகளை சந்தித்து 31 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை அவர் எட்டினார். இதனால் 10 ரன்னில் இரட்டை சதம் வாய்ப்பை தவறவிட்டார். டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.  ஷிகர் தவானைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டையும் பிரதீப் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய புஜாரா சதத்தை நோக்கி பயணித்தார். பின், புஜாரா 173 பந்துகளில் சதமும் எடுத்து கடைசியில் 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் களத்தில் இருக்கிறார்.

புஜாரா சதம் ...

தவானும், புஜாராவும் இணைந்து 153 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், பிறகு ரஹானே, புஜாரா ஜோடி 113 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சரிந்த கோலியின் பார்ம் இன்னமும் சரியாகவில்லை. இலங்கை அணியில் நுவான் பிரதீப் மட்டுமே சிறப்பாக பந்து வீசி, 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. முதல்நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஆட்ட முடிவில் புஜாரா 144 ரன்களுடனும் ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ஒரே நாளில் 399 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் இந்திய அணி எடுக்கும் 3-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். இவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களின் உணவு பட்டியல்

இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு, காலை 8 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அன்னாசி, வாழை, ஆரஞ்சு, அவோகடோ, கார்ன் ப்ளாக், கோதுமை ப்ளாக், சோகோ போப்ஸ், உலர்ந்த திராட்சை, ஆடை நீக்கிய பால், பாதாம், ஜாம், செயற்கை வெண்ணை, தேன், ஆரஞ்சு பழச்சாறு, பிரவுன் பிரெட், பலதானியம், கொழும்பு குறைந்த வெண்ணை, துண்டாக்கப்பட்ட சிக்கன், மீன், அவித்த முட்டை, வெட்டப்பட்ட தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், லெட்யூஸ், டீ, காபி, கிரீன் டீ. இந்த உணவுகளில் விரும்பியதை சாப்பிடலாம்.
மதிய உணவு மதியம் 12 மணிக்கு வழங்கப்படுகிறது. மக்காச்சோள சூப், பிரெட் ரோல், நான், காய்கறி சலாட், பீட்ருட் சலாட், சோறு, தயிர் சோறு, சிக்கன் கபாப், சிக்கன் மஞ்சூரியன், டால் நவ்ரத்னா, அவித்த காயகறிகள், கொழுப்பு குறைந்த தயிர், அப்பளம், இந்திய ஊறுகாய், வாழைப்பழம், ப்ரூட் சலாட், யோக்கர்ட், கிங் கோக்கனட் வாட்டர்.

மாலை 2.30 மணிக்கு தந்தூரி சிக்கன் சான்ட்விச் அல்லது மட்டன் ரேப்ஸ், ப்ரூட் கேக், குக்கீஸ், பிஸ்கட்ஸ், டீ, காபி, கிரீன் டீ. இவற்றில் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். போட்டிக்கு பிறகு மாலை 5 மணிக்கு உணவு வழங்கப்படுகிறது. சாப்பாடு, சிக்கன் மகானி, மஞ்சள் பருப்பு, பன்னீர் புர்ஜி, நான், ப்ரூட் பிளாட்டர். ஆகியவை வழங்கப்படும். இதுதவிர வட இந்திய உணவு வகைகளை சாப்பிடவும் வசதி உள்ளது. உதாரணத்திற்கு கார்ன் பாலக், உருளை மேதி, சிக்கன் தந்தூர், பன்னீர் லாபப்டார் போன்றவற்றை சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து