முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் பயிற்சி முகாமில் நடனமாடிய சானியா

புதன்கிழமை, 26 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில், இளம் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை நேகா துபியா, ஆசிய பசுபிக் மகளிர் டென்னிஸ் சங்க துணைத் தலைவர் மெலிசா பைன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது சானியா மிர்சா உள்ளிட்டோர், நடனமாடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகளுக்கான ஆசிய - பசுபிக் டென்னிஸ் தொடர், சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதனை பிரபலப்படுத்தும் வகையில், பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சானியா, இந்தியாவில் மகளிர் டென்னிஸ், மிகப்பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அதற்கான தேவைகளை இந்த பயிற்சி முகாம்கள் பூர்த்தி செய்யும் எனவும் கூறினார். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதற்கு சானியா பாராட்டு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து