துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு

வெள்ளிக்கிழமை, 28 ஜூலை 2017      அரசியல்
nithish kumar 2016 11 26

புதுடெல்லி, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை நிதிஷ்குமார் ஆதரித்து வாக்களித்திருந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவு என அவர்தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சிக்கு ...

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை பீகாரின் ஐக்கிய ஜனாதா தளம் கட்சி ஆதரித்து வாக்களித்திருந்தது. அதற்கு தலைகீழாக துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்திய வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு ஆதரவு என நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

மாற்றம் இல்லை ...

தற்போது, பீகாரில் லல்லுபிரசாத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், அவரது கட்சி துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிப்பதாக அறிவித்து இருந்தது. அதில் மாற்றம் இல்லை என்றும், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ண காந்திக்கு வாக்களிப்பார்கள் என்று நிதீஷ்குமார் தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க.வுடன் தற்போது நெருக்கமான உறவை நிதிஷ்குமார் கொண்டிருந்தாலும், எதிர்க்கட்சி வேட்பாளரை அவர் ஆதரித்துள்ளதால்  அவரது அரசியல் நிலைப்பாடு என்னவென்று புரியாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து