முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.8 கோடி கடன் உதவிகள் ராமநாதபுரத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 28 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.8 கோடி கடன் உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத் துறையின் சார்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை மற்றும் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார். இந்த விழாவில் அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் மற்றும்  26 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 654 நபர்களுக்கு ரூ.8.08 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கூட்டுறவுத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகள் மற்றும் ரூபே அட்டைகளும், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நேரடி கடனுதவி, கூட்டு பொறுப்புக்குழு கடனுதவி, வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடனுதவி, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க கடனுதவி, தாட்கோ திட்ட கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி என பல்வேறு கடனுதவி திட்டங்களின் கீழ் 26 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 654 நபர்களுக்கு ரூ.8கோடியே 8லட்சத்து 11ஆயிரம்  மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் மாணவ, மாணவியர்களுக்கான மடிக்கணினிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும்.  மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு சட்டக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.  அதேபோல மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரையில் செல்லும் இரயில்கள் அனைத்தும் உச்சிப்புளி ரயில் நிறுத்தத்தில் நிறுத்தம் செய்து செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் அவ்வப்பொழுது வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பேசினார்.
 இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பெ.ஜெயஜோதி, கூட்டுறவு கடன் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகேசன்,  ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தி.ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து