முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பல மாநிலங்களில் வன்முறை - ராகுல் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் வன்முறை பரவி வருகிறது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் வன்முறை பரவி வருகிறது - காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி .

சத்தீஸ்கர் மாநிலம் ஜெகதல்பூரில் இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பு (என்எஸ்யுஐ) சார்பில் 'எங்கள் உரிமைகள்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பழங்குடியின மாணவர்களுடன் ராகுல் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அங்கு அமைதி நிலவியது. ஆனால் 2014-ம் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் வன்முறை பரவி வருகிறது.

குறிப்பாக காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் நிலைமை மோசமாகி விட்டது. இதுபோல சிக்கிம், சத்தீஸ்கர் உட்பட நாட்டின் பல மாநிலங்களிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வனம், தாதுப் பொருள்கள், தண்ணீர் உள்ளிட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
மேலும் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்திரமற்ற நிலை உருவாகி உள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் பயனடைந்து வருவது யார்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ,சீனா, பாகிஸ்தான் ஆகிய பக்கத்து நாடுகளும்தான்'' என்று ராகுல் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து