போதைப் பொருள் சிக்கிய விவகாரம்: திரைப்படத் துறையை குறிவைப்பதா? நடிகை ரோஜா கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2017      இந்தியா
actress roja 2017 7 30 0

ஐதராபாத் : போதைப் பொருள் விவகாரத்தில் சினிமாத் துறையை குறி வைப்பது சரியல்ல. விசாரணை என்ற பெயரில் நடிகர், நடிகைகளைக் கொடுமைப்படுத்தக்கூடாது என நடிகையும், எம்.எல்.ஏ வுமான ரோஜா கூறினார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் ரவிதேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேரிடம் கலால் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் விவகாரத்தில் சினிமாத் துறையை குறி வைப்பது சரியல்ல. விசாரணை என்ற பெயரில் நடிகர், நடிகைகளைக் கொடுமைப்படுத்தக்கூடாது. -  நடிகை ரோஜா  எம்.எல்.ஏ..

இதுதொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, இந்த விவகாரத்தில் சினிமாத் துறையினர் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.  இந்நிலையில் திருப்பதியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கூறியதாவது:


போதைப் பொருளை எதிர்த்து உலகமே போராடி வருகிறது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர்.  சமீபத்தில் ஐதராபாத்தில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் உபயோகித்து வந்தது அவர்களுடைய வாட்ஸ் அப் மூலம் பெற்றோர்களுக்குத் தெரிந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில், இந்த விவகாரத்தின் பின்னால் உள்ள பலர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சினிமாத் துறையை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் சிலரின் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இது போன்றவர்களிடம் புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளா கலாம். ஆனால் விசாரணை எனும் பெயரில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களை குறி வைப்பதும், கொடுமைப் படுத்துவதும் கூடாது. இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து