முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாம் சாதி, மதம், இனம், மொழி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்: அப்துல்கலாம் பேரன் சலீம் சிறப்பு பேட்டி.

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம், : ராமேசுவரம் அருகே இந்திய குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த  அப்துல்கலாம் தேசிய நினைவுடத்தில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் மணிமண்டபம் வளாகத்தில் வீணம் வாசித்ததுபோல் அமைக்கப்பட்டுள்ள சிலையும்,அதன் அருகே பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.இதை தமிழக அரசியல் வாதிகள் தவறாக சித்தரித்து விமர்சனம் செய்து வரவதால்   சிலை அருகே திருக்குறள், பைபிள், குர்ரான், பகவத்கீதை என அனைத்து புத்தகங்களை வைத்து சாதி, மத, இன, மொழி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என அப்துல்கலாம்  பேரன் ஷேக் சலீம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் 2.50 ஏக்கர் இடத்தில் ரூ.15  கோடி 50 லட்சம் செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டது.இந்த மணிமண்டபத்தை அப்துல்கலாம் தேசிய நினைவகம்’ என்று பெயரிடப்பட்ட இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 27-ந் தேதி திறந்து வைத்தார்.அதன் பின்னர் மணிமண்டபம் வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையும்,அதன் அருகே வைக்கப்ப்ட்டிருந்த பகவத்கீதை புத்தகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த  ம.தி.மு.க. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வைகோ உள்பட  சில அரசியல் தலைவர்கள் அப்துல்கலாம் மணிமண்டபத்தில் வீணை வாசிப்பது போல் அவரது சிலை வைக்கப்பட்டு உள்ளதற்கும், அங்கு பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்து திருக்குறளில் இல்லாத கருத்துகள், உபதேசங்கள் வேறு எந்த நூலில் உள்ளன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அப்துல்கலாம் பேரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.
அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி அன அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்,  அப்துல்கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையையும், பகவத்கீதை புத்தகத்தையும் வைக்கப்பட்டுள்ளது   தவறு என  அரசியல் தலைவர்கள் கூறி வருவது வருத்தத்தை அளிக்கிறது.இதனை தொடர்ந்து சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை புத்தகத்தின் அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் வைத்தார்.அதன் பின்னர் டாக்டர் அப்துல்கலாம்   அனைத்து புத்தகங்களையும் படித்தவர். அவர் வாசித்த, ரசித்த புத்தகங்கள் அனைத்தும் மணிமண்டபத்தில் உள்ளன. மணிமண்டபத்தில் பணிகள் முழுமையாக முடிக்கவில்லை.ஆதலால் அப்துல்கலாம் படித்த புனித நூல்கள் முழுமையாக வைக்கப்படவில்லைதிருக்குறள், பகவத் கீதை, திருக்குர்ரான், பைபிள் என பல்வேறு புத்தகங்கள் இங்கு உள்ளன. அவை அனைத்தும் கண்ணாடி பேழையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவின் போது அவை முறைப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. இதனை சிலர் சரியாக கவனிக்காமல் பகவத் கீதையை வைத்து தவறான தகவல் பரப்பியுள்ளனர். என தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து