முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் தொழிற்நுட்பக் கல்லூரி 5வது பட்டமளிப்பு விழா!

திங்கட்கிழமை, 31 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-ஸ்ரீவி. கலசலிங்கம்  தொழிற்நுட்பக்கல்லூரியின்  5 வது பி. இ  பட்டமளிப்பு  விழா  கலசலிங்கம்  தொழிற்நுட்பக்கல்லூரி  சேர்மன்,  கலசலிங்கம் பல்கலை  வேந்தர் முனைவர்  கே. ஸ்ரீதரன்  தலைமையில் நடைபெற்றது.
இயக்குநர்கள்  டாக்டர்  எஸ். அறிவழகி,  முனைவர்  எஸ். சசிஆனந்த்,  எஸ். அர்ஜூன் கலசலிங்கம்,  பல்கலை துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர்,  பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கல்லூரி முதல்வர் :முனைவர் எஸ். ஹரிகிருஷ்ணன்  வரவேற்புரை வழங்கி,  ஆண்டறிக்கை வாசித்தார்.
சேர்மன் முனைவர் கே. ஸ்ரீதரன்  பட்டம் வழங்கும் விழாவினை  துவக்கிவைத்தார்.
இன்போஸிஸ் மனிதவள மேலாண்மை  மேலாளர்  ஜே. சுஜித்குமார் சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு  சி. எஸ். சி,  இ சி இ,  இ இ இ,   ஐ டி,  முடித்த  303 பேருக்கு  182 மாணவிகள் உட்பட எம் இ,  சி எஸ் சி,  வி எல் எஸ் ஐ  அண்ணா பல்கலை அளவில் 33வது ரேங்க் பெற்ற  கே. விவேக் ராபின்சன்,  22வது ரேங்க் பெற்ற பி. தனப்பிரபா,  45வது ரேங்க் பெற்ற  எம். ரம்யா,   ஆகியோர்களுக்கும் தங்க மடல்களுடன்  பட்டங்களை வழங்கி  பேருரை ஆற்றினார்.
துறைத்தலைவர்கள்  என் சி பிருந்தா,  எஸ். தாயம்மாள்,  ஏ. ரேமன்,  கே. ராஜசத்தியா  ஆகியோர் பட்டம் பெறும் மாணவர்கள் பட்டியலை வாசித்தனர்.
டீன்கள்  குருமூர்த்தி,  வைர பிரகாஸம்,  விஜயா  ஆகியோர்  முன்னிலைவகித்தார்கள்.
சிறப்பு விருந்தினர்  இன்போஸிஸ் மேலாளர் பேசுகையில் தற்பொழுது பெண்கல்வி குறைவதற்குக் காரணம்   பள்ளிகளில்  பெண்களுக்கான  பிரத்யோக  கட்டமைப்பு,  கழிப்பறை வசதி இல்லாமையே காரணம் என்றார்.  எனவே  தொழிற்கல்வி தொடர்வதில் பெண்கள்  குறைவாக உள்ளனர். 
மாணவர்கள் படித்த அறிவை  செய்முறையில் செயல்படுத்த  முடியவில்;;;;;லை.  இதற்குக் காரணம்  கல்லூரிகளில்  மாணவர்களுடைய புராஜக்ட்  முறையாக  செய்முறை பயிற்சித்திட்டத்தில்  நடைபெறவில்லை.  இதனால்  மாணவர்கள்  கம்பெனிகளிலும்  வளர்ந்துவரும் தொழிற்நுட்பத்திற்கு  ஏற்ப வேலைசெய்ய முடியவில்லை. என்றார்.
கட்டடவியல்துறை மாணவர்களிடம் தன் தகப்பனார்  1500  சதுர அடியில்  வீடுகட்ட  தேவையை கேட்டால் உடனே மாணவன்  இப்பொழுதுதான்படித்து முடித்துள்ளேன்.  எனக்கு குறைந்தது  10வருடம் அனுபவம் வேண்டும் என்றான்.  ஆனால் அதே கேள்வியை ஒன்றும் படிக்காத  கொத்தனாரிடம் கேட்டால்  உடனே  செங்கல்,  சிமிண்ட்  மணல் அளவு,  பணம் தேவை  பற்றி  கூறுகிறார்,   என்று பேசினார்.  இதற்குக் காரணம்  படித்து முடித்த மாணவர்கள்  எதையும் தன்னால் செய்ய முடியும்  என்று எண்ணி வேலைசெய்ய வேண்டும். எதிர்மறை  எண்ணம் இல்லாது படித்;த அறிவை பயன்படுத்தவேண்டும் என்று கூறினார்.
தூக்கத்தில் வருவது கனவல்ல.  தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு.  அதுதான் அப்துல்கலாம் சொல்லும் கனவு காணுங்கள். என்றார்.  நாம் படித்த விஷயத்தை சமுதாயத்திற்காக பயன்படுத்தினால்தான்  இந்தியாவை வல்லரசு நாடாக  மாற்றமுடியும்.என்று கூறினார்.
சிறப்பு விருந்தினர் “மாற்றம்”  என்ற பவுண்டேசன்  நிறுவனத்தினை நிறுவி  பெண்கல்வி மற்றும் பெற்றோர்கள் இல்லாதவர்கள்,  ஏழை மாணவ,  மாணவிகளுக்கு  இலவசக்கல்வி, நிறுவனங்களிலிருந்து பெற்று  வழங்கி வேலைவாய்ப்பும் தந்து  சிறப்பாக  செய்துவருவதாக  கூறினார்.
மாணவ,  மாணவிகள்  பெற்றோர்கள்  1000க்கும் மேற்பட்டோர்கள் கே எஸ. கிருஷ்ணன் ஆடிட்டோரியத்தில் திரளாகவந்து கலந்துகொண்டனர்.
பேராசிரியை பிருந்தா தலைமையில்  பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்  அனைவரும்  சேர்ந்த குழுவினர்  பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை  சிறப்பாக  செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து