முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வாழ்க்கை சாதனைகளை புகைப்படங்களாக தாங்கிய ரதம் ராஜபாளையம் வருகை

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம், - பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் வாழ்க்கை சாதனைகளை புகைப்படங்களாக தாங்கிய ரதம்(கலாம் சந்தேஷ் வாகினி) மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வைக்கப்பட்டது.
ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் ராமசந்திரராஜா தலைமையிலும் பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் ராமசுவாமிராஜா தலைமையிலும், ராம்கோ துவக்கப்பள்ளியில் பள்ளி தாளார் ஸ்ரீகண்டன்ராஜா தலைமையில் நடைபெற்றது. பி.ஏ.சி.அர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் வெங்ட்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். கலாம் சந்தோஷ் வாகினி பின்னர் மாணவ, மாணவிகளின் பார்வைக்காக ராம்கோ பொறியியல் கல்லூரி, பி.ஏ.சி.ஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல்நிலை;பள்ளி, பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்மயா வித்யாலயா, பி.ஏ.சி.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சென்று இறுதியாக ஜவஹர் மைதானத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது. கண்காட்சி வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரதத்தை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். ராம்கோ பி.ஏ.சி.ராமசாமிராஜா கல்வி தர்ம ஸ்தபானம் ஒருங்கிணைப்புடன் இந்த கண்காட்சி நடைபெற்றது. ரதம் 81நாட்கள் 16மாநிலங்கள் வழியாக பயணித்து இறுதியாக கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி புதிடெல்லியில் குடியரசுத்தலைவர் வரவேற்று நிறைவு செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து