முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலைட் சிறப்பு பயிற்சியில் பயின்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் எலைட் சிறப்ப பயிற்சியில் பயின்று பொறியியல் கல்லூhயில் சேர்ந்துள்ள மாணவர்களை கலெக்டர் முனைவர் நடராஜன் பாராட்டினார்.
  ராமநாதபுரத்தில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் கடந்த 2016-2017-ஆம் கல்வியாண்டில் எலைட் சிறப்பு பயிற்சியில் பயின்று தற்போது நடைபெற்று வரும் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூpரிகளில் கல்வி பயில இடம் கிடைத்துள்ள மாணவர்களைப் பாராட்டி புத்தகங்களை வழங்கினார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களை மெருகேற்றும் வகையில், தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களுக்கு மீள்திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரத்தில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இச்சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2016-2017 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 68 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு கூடுதல் கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சிகள், கூடுதல் தேர்வுகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. 
 இதன் மூலம்; 2016-2017 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் எலைட் பயிற்சி பெற்ற மாணவர்களில் 18 மாணாக்கர்கள் 1100 -க்கும் அதிகமான மதிப்பெண்களும், 8 மாணாக்கர்கள் 1050-க்கும் அதிகமான மதிப்பெண்களும், ஒட்டு மொத்தமாக 68 நபர்களில் 63 மாணாக்கர்கள் 1000-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றனர்.  அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் மூலம் 19 மாணாக்கர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி வளாகம்), அண்ணா பல்கலைக்கழகம் (எம்ஐடி வளாகம்) உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில இடம் கிடைத்துள்ளது.
 இவ்வாறு பொறியியல் கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ள மாணாக்கர்கள் இன்றைய தினம் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் ஆசிரியர்கள் தங்களுக்கு சிறப்பாக பயிற்சி வழங்கிட ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மாணாக்கர்கள் நன்றி தெரிவித்தனர். கலெக்டர்  முனைவர் நடராஜன் சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பாராட்டி, புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் நடப்பு கல்வியாண்டில் எலைட் பயிற்சி வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள் இதனை முன்னுதாரணமாக கொண்டு கடுமையாக உழைத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின் போது எலைட் சிறப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவநீத கிருஷ்ணன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து