முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலை ‘பப்பு’ என அழைக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு அமித்ஷா கண்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ, ராகுலை ‘பப்பு’ என அழைக்க வேண்டாம் என்று பா.ஜ.க தொண்டர்களுக்கு அமித்ஷா கண்டிப்புடன் அறிவுரை கூறினார்.

உ.பி. தலைநகர் லக்னோவில் பாஜக சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது, ‘காங்கிரஸ் போலன்றி உட்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி பாஜகதான்’ என்று குறிப்பிட்டார். அப்போது, “சோனியா காந்திக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறிய அமித்ஷா, தொண்டர்களை நோக்கி, “அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?” என கேள்வி எழுப்பினார். இதற்கு தொண்டர் ஒருவர் ‘பப்பு’ என பதில் அளித்தார்.

ராகுலை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளங்களில் அவரை ‘பப்பு’ என அழைக்கின்றனர். இந்நிலையில் தொண்டர் ‘பப்பு’ என்று கூறியதும், ‘அவ்வாறு சொல்லக்கூடாது’ என தொண்டரை உடனே கண்டித்தார் அமித்ஷா. இதுகுறித்து உ.பி. பாஜக பொதுச் செயலாளர் விஜய் பகதூர் பதக் கூறும்போது, “அரசியலில் நன்நெறிகளை எங்கள் கட்சி பின்பற்றச் செய்கிறது என்பதற்கு இது உதாரணம்” என்றார்.

உ.பி. காங்கிரஸ் தலைவர் தேவேந்திர பிரதாப் சிங் கூறும்போது, “மிகவும் புத்திசாலித்தனமாக இதுபோன்ற விஷயங்களை அவர்கள் அரங்கேற்றுகின்றனர். தொண்டரை கண்டித்த அவர்கள் அவரை இதுவரை கட்சியை விட்டு நீக்காதது ஏன்?” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து