ஈரோடு மாவட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.8,766 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      ஈரோடு
aa 0

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தெரிவித்ததாவது,

அறிக்கையை தயாரித்து

ஒவ்வொரு ஆண்டும் முன்னோடி வங்கியான கனரா வங்கி ஈரோடு மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்கிறது. அதன்படி 2017-18-ம் நிதியாண்டிற்க்கான கடன் திட்ட அறிக்கையை நபார்டு வங்கியின் ஆற்றல் சார்ந்த கடன்  திட்ட அறிக்கைப்படி வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் கல்வி, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் என பல்வேறு துறைகளுக்கு மொத்தம் ரூ.8,766 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 12.47 சதவீதம் அதிகமாகும்.
 2017-18-ம் ஆண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4,561 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகமாகும். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக ரூ.2,416 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 12 சதவீதம் அதிகமாகும். சுய உதவிக்குழுக்களுக்காக ரூ.160 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டை விட 23.08 சதவீதம் அதிகமாகும். கல்விக்கடன் மற்றும் வீட்டுக்கடன் உட்பட பிற இனங்களுக்கு ரூ.1789 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 12.47 சதவீதம் அதிகமாகும். அனைத்து இனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.8,766 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட ரூ.972 கோடி அதிகமாகும்.
இக்கூட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை புத்தகத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வெளியிட நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் அபுவராஜன்  பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேரன் உட்பட வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து