கிராம புறமக்களுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை கொடுத்து தொழிற்நுட்ப சேவை செல்கோ சோலார் நிறுவனம் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      ஈரோடு

கிராம புறமக்களுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை கொடுத்து தொழிற்நுட்ப சேவை கிராமப்புறங்களில் கிடைத்திட செல்கோ சோலார் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 1995ம் ஆண்டு பெங்களூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட செல்கோ சோலார் லைட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கிளைகள் ஈரோடு மற்றும் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.
செல்கோ சோலார் லைட் பிரைவேட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது, அந்நிறுவனத்தினர் கூறியதாவதுகிராமப்புற மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் பயன்பாடு ஏற்படுத்தித்தருவது, சூரிய ஒளி தொழிற்நுட்ப சேவையை கிராமபுறங்களுக்கும் கொண்டு சென்று பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.செல்கோ நிறுவனத்தின் மூலம் சுமார் 3 லட்சத்தி 20 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.28 சமுதாய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் 900 பள்ளிகளின் மூலம் 60 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

6 மாநிலங்கள்

தமிழ்நாடு, கர்நாடாக, கேரளா, குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் 49 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிறுவனத்தின் மூலம் சோலார் பம்ப், தையல் இயந்திரம், லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின், ரொட்டி மேக்கிங் மிஷின், டிரிம்மர், பால் தர பரிசோதனை மற்றும் எடை இயந்திரங்கள் ஆகியவை செயல்படுகின்றன.மேலும், பால் கறவை இயந்திரம், வேளாண் தொழிற்நுட்ப இயந்திரம், தள்ளுவட்டிக்கான இயந்திரம், சிறு பம்புகள், அறவை இயந்திரம், தறி ஆகியவை சோலார் மூலம் இயங்குவதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.ஈரோட்டில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ஈரோடு முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், நபார்டு வங்கி மேலாளர் அபுவாராஜன்,  கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் இயக்குனர் மற்றும் செகரட்ரி கௌதம் கோபாலரத்தினம், செல்கோ சோலார் லைட் பிரைவேட் நிறுவனத்தின் சேர்மன் ஹரிஸ்ஹண்டே, ஈரோடு கிளை மேலாளர் அருண், மதுரை கிளை மேலாளர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து