நீலகிரியில் அம்மா திட்ட முகாம் 4_ந் தேதி நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வரும்(4_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

நிவர்த்தி செய்ய ஏற்பாடு


நீலகிரி மாவட்டத்தில் 24.07.2015 முதல் அம்மா திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதியோர் ஓய்வூதியத்தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, புதிய உழவர் அட்டை, வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, விதவை சான்று மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெயர்சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மின்வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த குறைகள் கேட்டு குறை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
                    சமையல் கலை பயிற்சி
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தேனீ வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், தோடர் எம்ராய்டரி, நாட்டு கோழி வளர்ப்பு, உலர்கலம், செங்கல் சூளை, காபி, தேயிலை தோட்டம், விதை சேகரிப்பு பண்ணை, வீடுபழுது பார்த்தல், கறவை மாடு, செவிலியர் பயிற்சி, சமையல் கலை பயிற்சி, கோத்தர்களுக்கான மண்பாண்டம் செய்யும் இயந்திரம், பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரம், சேகரிப்பு மற்றும் விற்பனை மையம் போன்றவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
                            முதல் வெள்ளிக்கிழமை


இத்திட்டமானது ஆகஸ்ட் மாதம் 1_வது வெள்ளிக்கிழமையான வரும் 4_ந் தேதி ஊட்டி வட்டத்தில் மேல்தொரையட்டி சமுதாய கூடம்,  குன்னூர் வட்டத்தில் கேத்திபாலாடா என்.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளி,
குந்தா வட்டத்தில் அவலாஞ்சி சமுதாயகூடம், கூடலூர் வட்டத்தில் வாளவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பந்தலூர் வட்டத்தில் உப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளி  ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
எனவே இப்பகுதி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து