முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்றாம் பாலினத்தவர் நலம் வாரியத்தின் மூலம் சுய வேலைவாய்ப்பு பயிற்சி : மாவட்ட கலெக்டர்(மு.கூ.பொ)கே.முத்து வழங்கினார்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்(மு.கூ.பொ)கே.முத்து தலைமையில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவி

 இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர்(மு.கூ.பொ) பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 72 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 56 மனுக்களும், சமூக நலத்திட்டம் 3 மனுக்களும், குடும்ப அட்டை 3 மனுக்களும், ஆதிதிராவிடர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலம் 25 மனுக்களும், வேலைவாய்ப்பு 14 மனுக்களும், உரிமம் 1 மனுவும், சட்டம் மற்றும் ஒழுங்கு 13 மனுக்களும், ஊரக ஃ நகர்ப்புற வளர்ச்சி 15 மனுக்களும், கடனுதவி 2 மனுக்களும், அடிப்படை வசதி ஃ போக்குவரத்து ஃ சுகாதாரம் 1 மனுவும், சான்றிதழ்; 4 மனுக்களும், இதரதுறை 56 மனுக்களும், சான்றிதழ் நகல்கள் 1 மனுவும்;; மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டம் 1 மனுவும்; என மொத்தம் 267 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பாக மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தின் மூலம் 17.07.2017 முதல் 28.07.2017 வரையில் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் துரித உணவகம் அமைக்க திறன் வளர்ச்சி பயிற்சி பெற்ற 18 திருநங்கைகளுக்கு பயிற்சி சான்றிதழ்களையும், மாவட்ட வருவாய்த்துறை மூலம் நலிந்த கலைஞர்கள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு தலா ரூ.7,500- வீதம் மொத்தம் ரூ. 22,500-க்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர் (மு.கூ.பொ) வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ச.மீனா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சீ.ஜானகிராமன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து