முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய சிறையில் கைதிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம் மற்றும் காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

காசநோய் அறிகுறிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதார கல்வித்துறையின் சார்பில் பல்வேறு விதமான நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் சென்னை மாநகர் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், சென்னை மத்திய சிறைச்சாலையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகளுக்கு நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வும், காசநோய் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், காசநோய் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சளிப் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து ஆறு மாத காலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முறையாக மருந்துகள் உட்கொள்கிறார்களா என்று அவர்கள் வசிக்கும் பகுதிக்குரிய சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

மேலும், காசநோய் களப்பணியாளர்கள் மூலம் குடிசைப்பகுதிகளில் வீடு வீடாக பரிசோதனை செய்து, காசநோய் அறிகுறிகள் யாருக்கேனும் உள்ளதா என்று கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து, சென்னை புழலில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை சார்பாக சுகாதார கல்வி அலுவலர், காசநோய் திட்ட அலுவலர் மற்றும் 25 காசநோய் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினரால் 1700 விசாரணை கைதிகள், 600 தண்டனை கைதிகளுக்கு நோய்கள் எவ்வாறு உருவாகின்றன, அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முறையாக சோப்பு உபயோகித்து கை கழுவுவதன் மூலம் பல தொற்று நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை பற்றி எடுத்துக் கூறி, கைகழுவும் முறை குறித்து செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும், கைதிகள் அனைவருக்கும் பிளாக் வாரியாக ஒவ்வொரு இடத்திலும் இவ்விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கை கழுவும் முறைக்கான படத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் அனைத்து சிறை பிளாக்குகளிலும் விழிப்புணர்வுக்காக ஒட்டப்பட்டுள்ளன.

பின்னர், காசநோயின் பொதுவான அறிகுறிகளான மாலை நேரக் காய்ச்சல், இரண்டு வாரம் தொடர்ந்து இருமல், சளியில் இரத்தம் கலந்து வருதல், பசியின்மை, எடை குறைவு போன்ற அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவ்வாறு அறிகுறிகள் உள்ளவர்கள் சளிப் பரிசோதனை செய்ய, மாதிரிகள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பேரில், 183 பேர் சளிப் பரிசோதனைக்காக மாதிரிகள் அளித்தனர். அதனை, மாநகராட்சி காசநோய் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு மட்டும் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவ அலுவலர் மூலமாக உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து