முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உடனே படையை வாபஸ் வாங்க வேண்டும்: சீனா திட்டவட்டம்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் :  தற்போதுள்ள ஏற்பட்டுள்ள மோதல் போக்கிற்கு தீர்வுகாண டோக்லம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்தியாவுக்கு உட்பட்ட டோக்லம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு சீனா சாலை போட விடாமல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவும் போட்டிக்கு ராணுவத்தை நிறுத்தியுள்ளது.
இதனால் இருநாடுகளிடையே பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. டோக்லம் பகுதியானது இந்தியாவுக்கு உட்பட்டது என்றும் அங்கு சாலை அமைத்தால் சிக்கிமில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல முடியாது என்றும் இந்தியா கூறிவருகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய முயற்சி செய்து வருகிறது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் நகருக்கு சென்றிருந்தார். பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் இறுதியில் பெய்ஜிங் சென்றிருந்த தோவல், சீன நாட்டு பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அமைச்சக உயரதிகாரி, வெளியுறவுத்துறை அதிகாரி,இந்திய-சீனா எல்லைப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சீனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள  மாகாண கவுன்சிலர் யாங் யெச்சி ஆகியோர்களை சந்தித்து பேசினார்.

அப்போது டோக்லம் பிரச்சினைக்கு தீர்வுகாணுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டோக்லம் பகுதியில் இந்தியா தனது படையை உடனடியாக வாபஸ் வாங்கும் உறுதியான நடவடிக்கையை எடுத்தால்தான் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அந்த நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. டோகலம் பகுதியில் இரண்டு நாடுகளின் படைகளையும் ஒரே நேரத்தில் வாபஸ் வாங்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.

டோக்லம் பகுதியில் சீனா சாலை அமைத்தால் அங்கிருந்து இந்தியாவின் வட மாநிலங்களுக்கு செல்ல சீனா ராணுவம் தடுத்து நிறுத்தும் என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதேசமயத்தில் ஒரு வரை பட சீட்டையும் சீனா வெளியிட்டுள்ளது.

அதில் சிக்கிம் பகுதியில் சீனாவின் எல்லைக்குள் சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு இந்திய படைகள் ஊடுருவி இருப்பதாகவும் முதலில் 400 வீரர்களை நிறுத்தியது என்றும் பின்னர் வீரர்கள் குறைக்கப்பட்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு சீனா நடந்துகொள்ளும். ஆக்கிரமிப்பு விஷயத்தில் சீனா ஒருபோதும் தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளது.

சீனா சாலை போடுவதற்கு பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று இந்தியா கூறியிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பூட்டான்-சீனா இடையே உள்ள எல்லைப்பிரச்சினையில் 3-வது நாடான இந்தியா தலையிட முடியாது என்றும் எல்லைப்பிரச்சினைக்கு நாங்கள் இரண்டு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் அந்த வரைபட சீட்டில் சீனா தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து