முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லாபுரம் டெங்குகாய்ச்சல் முகாம் சுகம் மருத்துவமனை நடத்தியது

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      சென்னை

தமிழக சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் எல்லாபுரம் ஊராட்சி ஓன்றியத்தில் டெங்கு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. சென்னையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

 நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடசென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகள் நலப்பிரிவில் 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பேருக்கு டெங்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்து. இந்த சூழ்நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது.

அதேபோல் முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் மருத்துவமுகாம் எல்லாபுரம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சுகம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர். டி.பி.டி.சத்தியகுமார் தலைமையில் டாக்டர் மதன் மற்றும் மருத்துவர்கள் மூலம் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. டெங்குவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது

மருத்துவமனைகளில் மருந்து மாத்திரை படுக்கை வசதிகள் அனைத்தும் போதிய அளவில் உள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. இவ்வாறு குழந்தைசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து