பெரம்பலூர் மாவட்டதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனை முனையக் கருவி மூலம் உரம் விற்பனை : கலெக்டர் வே.சாந்தா துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      பெரம்பலூர்

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் ஆதார் அட்டை அடிப்படையில், விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக கையடக்க விற்பனை முனையம் கருவிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா நேற்று (01.08.17) மாவட்ட ஆட்சியரகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க செயலாளர்களிடம் வழங்கினார்.

துவக்கம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் 53 கூட்டுறவு கடன் சங்கங்கள் 170 தனியார் விற்பனையாளர்கள் என மொத்தம் 223 உர விற்பனை நிறுவனங்கள் உள்ளன. இதில் 50 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முதல் கட்டமாக விற்பனை முனையக் கருவிகள் வரப்பெற்றுள்ளன. ரூ.18,000 மதிப்புடைய இக்கருவிகளை கிரிப்கோ உர நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. இந்தக் கருவி மூலம் விவசாயிகள், அரசு அறிவித்துள்ள சரியான விலைக்கு உரங்களை பெற்றுப் பயனடையலாம். ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு உரங்கள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு உரங்கள் செல்வது முழுமையாக தடுக்கப்படுகிறது.

மேலும், விவசாயிகள் சரிவிகித முறையில் உரமிடுவதும், பயிர் தேவையின் அடிப்படையில் உரங்கள் பெறுவதும் உறுதி செய்யப்படும். மேலும் ஆகஸ்ட் -2017 முதல் டிசம்பர் -2017 வரை இத்திட்டமானது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. 01.01.2018 முதல் விவசாயிகள் தங்களது மண் வள அட்டையின் அடிப்படையில் வாங்கும் உரங்களுக்கு உரிய மான்யம் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறும்இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் சுதர்சன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் பெரியசாமி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து