தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் கரந்தை தமிழ் சங்க நூலகத்தில் சட்ட மன்ற பேரவை நூலகக் குழு தலைவர் ஆய்வு

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நூலகக் குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் நேற்று (01.08.2017) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக்குழு தலைவர் தெரிவித்ததாவது,உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு வந்து ஆராய்ச்சிக்காக பல நூல்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காலத்தை வென்ற கலை பெட்டகமாக விளங்கும் சரஸ்வதி மகால் நூலகம் நாயக்க மன்னர் காலத்தில் தொடங்கப்பட்டு, மாராட்டிய மன்னர்கள் காலத்தில் வளர்க்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களாலும், முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களாலும், நூலகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் இதர செலவினங்களுக்காக நிதியாண்டிற்கு ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் முதலமைச்சர் அம்மா பணியாளர்களின் ஊதியம் மற்றும் அகவிலை ஏற்றம் மற்றும் இதர செலவினங்களை கருத்தில் கொண்டு 2013-2014ம் நிதியாண்டு முதல் ரூ.40 இலட்சம் என்று இருந்த நிதி ஒதுக்கீட்டினை ரூ.75 இலட்சமாக உயர்த்தி வழங்கினார்.கிணற்றிலிருந்து இரைக்க இரைக்க நீர் ஊறுவது போல் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்கபடிக்க நமது அறிவு ஊற்றானது மேன்மை அடையும். இந்தியாவிலேயே சிறந்த நூலகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இவ்வாய்வுக் கூட்டத்தில் தமிழ்த் துறை பண்டிதர் நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கை பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணியாளர் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. அதுவும் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே போல் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பயிற்சி கால அளவு மூன்று மாதமாக நீண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சட்ட மன்ற பேரவைக்குழு கே.வி.இராமலிங்கம் தெரிவித்தார். பின்னர், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் பராமரிக்கும் முறை குறித்தும், ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றும் செய்யப்படும் முறை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் கரந்தை தமிழ் சங்க நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவ்வாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு உறுப்பினர்கள் வெ..ஆண்டி அம்பலம் (நத்தம்), .சண்முகம் (கிணத்துக்கிடவு), ஆர்.எம்.சின்னத்தம்பி (ஆத்தூர்) (செ.), பே.சீத்தாபதி (திண்டிவனம்) (செ.), கு..செல்வம் (ஆயிரம்விளக்கு), .ராமர் (குளித்தலை), .நா.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), குழு அலுவலர் நிலை துணைச் செயலாளர் பெர்லின் ரூப்குமார், மாநகராட்சி ஆணையர் வரதராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சுரே~;, முதன்மை கல்வி அலுவலர் சுபா~pனி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், சரஸ்வதி மகால் நிர்வாக அலுவலர் (பொ) ராமகிருஸ்ணன், மாவட்ட நூலகர் செல்வராஜ், சரஸ்வதி மகால் நூலகர் சுதர்~ன், தமிழ் பண்டிதர் மணிமாறன் அருட்காட்சியக காப்பாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து