ஈரோடு மாவட்டம் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      ஈரோடு
2 8 2017 ph 2

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் நடைபெற உள்ள தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர்  ; தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி) ஆகியோர் முன்னிலையில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு நிகழ்ச்சியில்  சுற்றச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்  தெரிவித்ததாவது,

ஆடிப்பெருக்கு விழா

ஈரோடு மாவட்;டத்தில் தீரன் சின்னமலை  ஆடிப்பெருக்கு விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரச்சலூர் ஓடாநிலையில் 03.08.2017 அன்று நடைபெற உள்ளது.   ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின்  ஆடிப்பெருக்கு விழாவில்  பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தலைமையில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி ,  நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்ட செயலாக்கத்;துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ,  சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர், டாக்டர் வெ.சரோஜா ,  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ,  வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ,  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தீரன் சின்னமலை  மண்டபத்தில் உள்ள அவரின்  திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா சிறப்புரையாற்றி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.

அணைத்து வசதிகள்

இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருடந்தோறும் வருவதால் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் அரசு இசைப்பள்ளி, கலைப்பண்பாட்டுத்துறை உள்பட பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  இவ்விழாவில் மருத்துவ நலப்பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், மேலும்  சித்த மருத்துவத்துறையின் சார்பில் பல்வேறு மூலிகைகளின் பயன்கள் குறித்து விளக்கப்படவுள்ளது.

இந்த விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்; தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு அவர்களது வாழ்க்கை வரலாறு, பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து  பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களின் திட்டங்கள் மற்றும் சாதனைகள்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படக்கண்காட்சி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டுவளர்;ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, சித்த மருத்துவத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கூட்டுறவுத்துறை, வனத்துறை ஆகிய துறைகளின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை விளக்கிடும் வகையில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது என  சுற்றச்சூழல் துறை அமைச்சர்

கே.சி.கருப்பணன் அவர்கள தெரிவித்தார்.
இந்த ஆய்வு நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.விக்னேஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தே.ராம்குமார்  மற்றும் ஆர்.சரண் உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து