தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எஸ்.முத்தையா எம்.எல்.ஏ தலைமையில் ஆய்வு

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      கோவை
August 02A- COmmittee Photo

 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் டாக்டர்.எஸ்.முத்தையா எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் கோவை சுங்கம்,  தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணிமனை, ஆவின் பாலகம், ஆகிய இடங்களில் இன்று (02.08.2017) மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்  அவர்களின் முன்னிலையில்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப பூங்கா (வுஐனுடுநு Pயுசுமு;) கூட்டரங்கில் வேளாண்மைத்துறை, தாட்கோ, போக்குவரத்துத்துறை, மற்றும் தொழில்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் டாக்டர்.எஸ்.முத்தையா எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நேரில் ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு சுங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பணிமனையிலுள்ள உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என்றும் பேருந்துகளை இயக்கும்போது எந்த விதமான விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25-ஆண்டுகள் விபத்துகளே இல்லாமல் பேருந்துகளை இயக்குகின்ற ஒட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி தமிழ்நாடு அரசு  ஊக்குவிக்கப்படுகின்றது. மேலும் பேருந்துகளை விபத்தில்லாமல் பாதுகாப்பாக இயக்க ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஒட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களிடம் தனித்தனியே கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு  பணியில் மன நிறைவுடன் இருப்பதாக தெரிவித்தனர் என தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தெரிவித்தார்.
பின்னர், பேரூர், பச்சாப்பாளையம் ஆவின் பால் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 2.60லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது.  இதில் 1.52லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது. 30 ஆயிரம் லிட்டர் பால் கேரள மாநிலத்திற்கு விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் சுமார் 1லட்சம் லிட்டர் பாலில் பால் பவுடர், வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால்பொருட்கள் ஆவின் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிவித்தார்

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

மேலும், தகவல் தொழில்நுட்ப பூங்காவனது சுமார் 17.5லட்சம் சதுர அடி பரப்பளவில் 70 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் சுமார் எட்டாயிரம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் வளர்ச்சியடைய செய்து வேலைவாய்பினை பெருக்கி மென்பொருள் உற்பத்தியை அதிகரிக்க செய்து கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்;நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் டாக்டர் எஸ்.முத்தையா  தெரிவித்தார்.
இவ்;வாய்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, ஏ.இரத்தினசபாபதி எம்.எல்.ஏ, ஜ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ, முனைவர் கோவி.செழியன் எம்.எல்.ஏ, ச.வெற்றிவேல் எம்.எல்.ஏ, என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ, கு.பிச்சான்டி எம்.எல்.ஏ, அ.பிரபு எம்.எல்.ஏ, கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ, மற்றும் சட்டப்பேரவை செயலக துணை செயலாளர் மு.கருணாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்.கே.அர்ஜீனன், என்.கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பூங்கா மேலாண் இயக்குநர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் (பொ) கே.பாண்டி, பொது மேலாளர் இ.கோவிந்தராஜ், வேளாண் உதவி இயக்குநர் (விற்பனை) மோகனசுந்தரம், தாட்கோ பொது மேலாளர் கீதா,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சுரேஷ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் (பொ) ராஜ்குமார், மற்றும்  பொது நிறுவனங்கள் குழு அலுவலர்கள், கலந்துகொண்;டனர்.

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து